ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. 103–வது இடத்தை பிடித்தது,
 • ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. 103–வது இடத்தை பிடித்தது,

  ஆசிய அளவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

  பல்கலைக்கழகங்களின் செயல்திறன், ஆய்வுகள், கட்டமைப்புகள், கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை அளிக்கப்பட்டு உள்ளது.

  அதன்படி சிங்கப்பூரை சேர்ந்த தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 2–வது இடத்தை பெற்றது.

  இந்தியாவை சேர்ந்த 42 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும் பல பல்கலைக்கழங்கள் தங்கள் தரவரிசையில் சறுக்கி உள்ளன. இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (பெங்களூரு) 2 இடம் சறுக்கி 29–வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 2 இடம் இறங்கி 44–வது இடத்தையும் பிடித்தது.

  சென்னை ஐ.ஐ.டி 41 இடங்கள் சறுக்கி 103–வது இடத்தை பெற்றது. இந்திய சுரங்க கல்வி நிறுவனம் 141–வது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 194–வது இடத்தையும் பிடித்து முதல் முறையாக தரவரிசையில் இடம் பெற்று உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சுவிஸ் செய்தி
இலக்கியம்
இலங்கை சட்டம்
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்