எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது,
 • எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது,

  ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளுடன் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு பகுதியில் நள்ளிரவில்  இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்கு வந்துள்ளனர்.

  அப்போது  அங்குள்ள மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர். மேலும் படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை வீசி எறிந்தது மட்டுமல்லாமல் அவர்கள் மீது கற்கள், பாட்டில்கள் வீசி எரிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள 7 தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்துள்ளதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

  சட்ட விரோதமாக மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடிச் சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்..இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக ,மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு, விரட்டியடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
சினிமா
சிறுவர் உலகம்
 மரண அறித்தல்