அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,
 • அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்,

  நடத்தியாவது மத்திய அரசை கண்டிக்க வேண்டும்.இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன். ஏற்கப்படாவிட்டால் மதுரை மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்.

  மத்திய அரசை எதிர்த்து இரு சக்கர வாகன பேரணி நடத்துவோம். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்படும்.

  மாநில அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லதுதான். ஆனால் மக்களை பாதிக்கும் வி‌ஷயங்களிலும் அமைதியாக இருப்பது நல்லதல்ல. குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க முடியாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு.

  எனவே கட்சியின் நலன் கருதி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ராஜன் செல்லப்பா பாராளுமன்ற உறுப்பினர், மதுரை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பொறுப்புகளையும் ஏற்கனவே வகித்தவர். இவரது திடீர் அறிவிப்பு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
வினோத நிகழ்வுகள்
ஆன்மிகம்
சினிமா
 மரண அறித்தல்