குறுக்குவழியில் முதலமைச்சர் ஆகும் எண்ணம் இல்லை: டி.டி.வி. தினகரன்,
 • குறுக்குவழியில் முதலமைச்சர் ஆகும் எண்ணம் இல்லை: டி.டி.வி. தினகரன்,

  குறுக்குவழியில் முதலமைச்சர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

  டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று 5-வது கட்டமாக ஆர்.கே.நகர் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். கொருக்குப்பேட்டை அண்ணா நகர், கருமாரி அம்மன் நகர், முனீஸ்வரன் நகர், கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. யார் அவ்வாறு செயல்படுகிறார்கள் என மக்களுக்கு தெரியும். இதற்கெல்லாம் ஜெயக்குமார் விரைவில் பதில் சொல்லியாக வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமார் முடிந்தால் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிக் காட்டட்டும்.

  குறுக்கு வழியில் முதலமைச்சராக நான் என்றும் நினைத்ததில்லை. அதை விரும்புவதும் இல்லை. எங்கள் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே நான் முதலமைச்சர் ஆவேன். இவர்களைப்போல சசிகலா வழங்கிய முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு நாடகமாட எனக்கு தெரியாது.

  பஸ் டிக்கெட் கட்டண உயர்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு ஆஜராக சம்மன் வந்துள்ளது. நான் கண்டிப்பாக ஆஜராவேன். சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். ஆதலால் அவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை.

  முதலமைச்சர் மத்திய அரசை எதிர்ப்பதுபோல நாடகமாடி வருகிறார். மத்திய அரசின் கைப்பாவைகளாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
சாதனையாளர்கள்
இலங்கை சட்டம்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink