பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வைப் பாராட்டும் பவுத்த தேரர்,
  • பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வைப் பாராட்டும் பவுத்த தேரர்,

    போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே புலம்பெயர் தமிழர்களுக்கு, நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்தார் என்று பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது.

    அதேவேளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டை பாராட்டியுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் தூதரக அதிகாரிகளும், சிங்களவர்களும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைப் போன்று பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

    லண்டனில் தூதரக சேவையில் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை இணைத்து கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதற்காக இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு சென்றிருந்த பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர் குறித்த நடவடிக்கையை பாராட்டி கடிதமொன்றை கையளித்துள்ளார்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
தொழில் நுட்பம்
சிறுவர் உலகம்
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்