பிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான கட்டணம் உயர்வு,
 • பிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான கட்டணம் உயர்வு,

  Immigration Health Surcharge (IHS) கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்க உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

  பிரித்தானிய சட்டத்தின் படி, European Economic Area (EEA) பிரதேசத்தை சேராதவர்கள், 6 மாதத்திற்கு மேற்பட்ட விசாவில் பிரித்தானியாவுக்குள் வரும் போது IHS கட்டணம் செலுத்தவேண்டும்.

  அவர்கள் விசாவுக்கு விண்ணப்பம் மேற்கொள்ளும் போது இக்கட்டணங்களை மேற்கொள்வார்கள்.

  தற்போது இந்தக் கட்டணம் வருடத்திற்கு 200 பவுண்டுகளாக உள்ளது. இது விரைவில் வருடத்திற்கு 400 பவுண்டுகளாக அதிகரிக்க உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

  மாணவர்களும், Youth Mobility Scheme இன் கீழ் வருபவர்கள் குறைந்தகட்டணமாக 150 பவுண்டுகள் செலுத்துவார்கள். அவர்களுடைய கட்டணமும் 300 பவுண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.

  இலங்கை போன்ற நாடுகளிலிருந்து Spouse விசாவில் (இரண்டரை வருட விசா) வருபவர்கள் தற்போதுள்ள விதிமுறையின் படி 500 பவுண்டுகள் (வருடத்திற்கு 200 பவுண்டுகள் வீதம்) செலுத்துவார்கள்.

  இந்த புதிய விதிமுறை நடமுறைக்கு வரும்போது அவர்கள் 1000 பவுண்டுகள் செலுத்தவேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகர்வு பல விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
இலக்கியம்
மருத்துவம்
தையல்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink