ஐ லவ் யூ: மனைவி கையில் உயிரிழந்த கணவரின் இறுதி நிமிடங்கள்,
 • ஐ லவ் யூ: மனைவி கையில் உயிரிழந்த கணவரின் இறுதி நிமிடங்கள்,

  பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவன், மனைவி கையில் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் வெயின் பார்டன் (36), இவரின் மனைவி லிசா (37), தம்பதிக்கு பிரயோனி மே (5) என்ற மகள் உள்ளார்.

  கடந்த 2016-ஆம் ஆண்டு வெயினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது உணவுக்குழாய் மற்று கல்லீரலில் வெயினுக்கு புற்றுநோய் உண்டாகியிருப்பது தெரியவந்தது.

  இந்நோயை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் வெயின் இருந்து வந்தார்.

  இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் திகதி நோய் பாதிப்பு வெயினுக்கு அதிகமாக, தனது மனைவி லிசாவின் கையில் சாய்ந்தப்படி உயிரிழந்துள்ளார்.

  வெயினின் இறுதிச்சடங்கு பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று நடைபெறவுள்ளது.

  இது குறித்து லிசா கூறுகையில், சில மாதங்களாகவே வெயினால் சரியாக பேச முடியவில்லை, என் கையில் சாய்ந்தபடி இறப்பதற்கு முன்னால் என்னை பார்த்து ஐ லவ் யூ என வெயின் கூறினார்.

  இது என் வாழ்க்கையின் மிக கடினமான நிமிடமாக இருந்தது, வெயின் இறக்கும் போது அருகில் அவர் தாய் மற்றும் சகோதரரும் உடனிருந்தனர்.

  அவரை பிரிந்து நானும், பிரயோனியும் எப்படி வாழ போகிறோம் என தெரியவில்லை.

  வருங்காலம் குறித்து யோசிக்கவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
அரசியல் கட்டுரைகள்
ஜோதிடம்
சினிமா
 மரண அறித்தல்