சுவிஸ் குடியுரிமைக்காக போராடும் தம்பதி,
 • சுவிஸ் குடியுரிமைக்காக போராடும் தம்பதி,

  சுவிஸ் குடியுரிமை பெற நீண்டகாலம் போராடிய தம்பதியரில் கணவருக்கு மட்டும் குடியுரிமை கிடைத்து மனைவிக்கு மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

  சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை பிறப்பிடமாக கொண்ட இத்தாலியர் Salvatore, இவரது மனைவி Antonia Scanio மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுக்கு, குடிமக்களாகும் தகுதியில்லாதவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்தாண்டு குடியுரிமை மறுக்கப்பட்டது.

  இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சுவிஸ் அதிபராக இருக்கும் அப்போதைய உள்துறை அமைச்சரும் அத்தம்பதிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

  Salvatore கருத்து தெரிவிக்கையில், இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை, என் நாடு என்னை ஒரு குடிமகனாவதற்கு தகுதியற்றவன் என்று கருதுவது எனக்கு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காயம் ஆறுவது கடினம் என்று தெரிவித்தார்.

  அந்த தம்பதிக்கு மீண்டும் விசாரணைக்குட்பட ஒரு வாய்ப்பளிக்கப்பட்டபோது இன்னொருமுறை அவமானத்திற்கும் சிறுமைப்படுத்துதலுக்கும் உள்ளாக விரும்பவில்லை என்று கூறி அவர்கள் அதை மறுத்துவிட்டனர்.

  இந்நிலையில் கடந்த மாதம் 29ம் திகதி மீண்டும் அவர்களின் கோப்புகளை ஆய்வு செய்த Nyon நகர அதிகாரிகள் தங்கள் முடிவை அறிவித்தனர்.

  அதன்படி Salvatore Scanioவும் அவரது பிள்ளைகளும் சுவிஸ் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள், ஆனால் Antonia Scanioவுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

  மேலும் முன்பு தம்பதியராக அவர்களது கோப்புகள் பரிசீலிக்கப்பட்டன, பிறகு தனித்தனியாக அவர்களது கோப்புகள் ஆராயப்பட்டபோது Antonia Scanio குடிமகளாக தகுதிபெறவில்லை என்று அவர்களை ஆய்வுக்குட்படுத்தின கமிஷனின் தலைவரான Stéphanie Schmutz தெரிவித்தார்.

  18 வயது முதல் சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் Antonia Scanio, சுவிட்சர்லாந்தின் வரலாறு, நிறுவனங்கள் மற்றும் நாட்டில் உற்பத்தியாகும் மூன்று ஆறுகளின் பெயரைக் குறித்த கேள்விகளுக்குக் கூட சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  ஆனால் இதைக்குறித்து கருத்து தெரிவித்துள்ள Salvatore, தனது மனைவிக்கு பதில்கள் நன்கு தெரியும் என்றும், நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கிண்டலாகவும் அவமதிக்கப்படும் வகையிலும் இருந்ததால் எரிச்சலுற்று அவர் பதிலளிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்தார்.

  இந்த முடிவை எதிர்த்து தம்பதியினர் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
தையல்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink