சுவிட்சர்லாந்தின் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடும் சர்ச்சைக்குள்ளான திரைப்படம்,
 • சுவிட்சர்லாந்தின் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடும் சர்ச்சைக்குள்ளான திரைப்படம்,

  இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குள்ளான திரைப்படமாகிய பத்மாவத் ஓடும் சுவிஸ் திரையரங்குகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

  ஹிந்து ராணி ஒருவர் மேல் மையல் கொண்ட இஸ்லாமிய மன்னர் ஒருவரைக் குறித்த திரைப்படமான பத்மாவத் இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. வன்முறை வெடித்தது, திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

  நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. நான்கு இந்திய மாநிலங்கள் இப்படத்தைத் திரையிட தடை விதித்தன.

  இறுதியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடைகளை நீக்கியது.

  பத்மாவதியைக் கடவுளாகக் கருதி பூஜிக்கும் ராஜபுத்திர அமைப்புகள் பல சாலை மறியல்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தன.

  இதற்கெல்லாம் முக்கியக் காரணம், வரலாற்றுச் சிறப்பு மிக்க நபராகக் கருதப்படும் ஹிந்து ராணியான பத்மாவதி இஸ்லாமிய மன்னரான அலாவுதீன் கில்ஜியால் அவமதிக்கப்படுவதாக திரைப்படத்தில் காட்டப்படுவதாக வெளியே கிளம்பிய புரளிதான்.

  Controversy surrounding Indian movie #Padmaavat draws in the crowds at Swiss screenings. pic.twitter.com/tTlM0Fz1it

  — swissinfo.ch (@swissinfo_en) 28 January 2018

  ஆனால் சுவிட்சர்லாந்தில் வாழும் இந்தியர்களுக்கிடையே திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு காணப்படுகிறது. திரையரங்குகளில் டிக்கெட்கள் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.

  La Tour-de-Peilzவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திரரான மீனாக்ஷி “ஒரு ராஜபுத்திரப் பெண்ணாக இந்தப்படத்தைப் பார்த்து நான் பெருமையடைகின்றேன். இதை எதிர்ப்பவர்கள் முதலில் படத்தைப் போய் பாருங்கள் என்று நான் சொல்லுவேன்” என்கிறார்.

  இந்தியாவில் மக்கள் எதிர்ப்புக் காட்ட வேண்டிய விடயங்கள் பல உள்ளன, அதையெல்லாம் விட்டு விட்டு அவர்கள் பார்க்காத ஒரு படத்தைப்பற்றி மண்டையைக் குழப்பிக்கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

  சில வாரங்களுக்கு முன் இந்தியா சென்றிருந்தபோது படம் தொடர்பாக அங்கு நடந்த களேபரங்களைக் கண்டிருந்த Lausanneஐச் சேர்ந்த Quentin, படத்தைக் குறித்த சர்ச்சைகளைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நான் பெரியதாக எதிர்பார்த்தேன், ஆனால் படத்தைப் பார்த்தபிறகு, உண்மை நிலை தலைகீழாக இருந்தது.

  படத்தில் ராஜ புத்திரர்களைக் குறித்து தவறாக எதுவும் காட்டப்படவில்லை, இது படத்தைதடை செய்வதற்காக வேண்டுமென்றே ஒரு சாக்குப்போக்குதான்” என்கிறார். பெண்கள் மொத்தமாக தற்கொலை செய்துகொள்ளும் உடன்கட்டை ஏறுதல் காட்சி சித்தரிக்கப்பட்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்ததாக சிலர் தெரிவித்தார்கள்.

  ஒரு ஒளிப்பதிவாளராக பார்க்கும்போது, இது ஒரு அருமையான திரைப்படம், ஆனால் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியில் உடன்கட்டை ஏறுதலைப் பார்ப்பதற்கு பெண்களுக்கு சற்றுக் கடினமாகத்தான் இருக்கும் என்று கூறும் Bernஐச் சேர்ந்த Pedro, இருந்தாலும், இதை ஒரு திரைப்படத்தில் காட்டுவதால் இயக்குநர் இந்தப் பழக்கத்தை ஆமோதிக்கிறார் என்று பொருள் அல்ல என்கிறார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
இலங்கை செய்தி
உலக சட்டம்
இலக்கியம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort