உலகில் கருப்பு பணம் குவியும் நாடுகளில் முதலிடம் பிடித்த சுவிஸ்,
 • உலகில் கருப்பு பணம் குவியும் நாடுகளில் முதலிடம் பிடித்த சுவிஸ்,

  உலகில் மிக அதிகம் கருப்பு பணம் குவியும் நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொடர் நிர்பந்தம் காரணமாக கருப்பு பண விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  Tax Justice Network என்ற தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கணக்கில் வராத நிதி சுவிட்சர்லாந்து வங்கிகளில் குவிந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

  உலக நாடுகளின் பெரு முதலாளிகள் சுவிட்சர்லாந்தை தெரிவு செய்வதன் காரணம் என்ன என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டதுள்ளது.

  வல்லரசு நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் மொத்த வருவாயின் பெரும்பகுதியை சுவிட்சர்லாந்தில் சேமிக்கன்றனர்.

  அதேவேளையில் வளரும் நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் வருவாய்க்கு அதிகமாக ஈட்டிய செல்வத்தை சொந்த நாட்டில் வரியாக செலுத்தாமல் கருப்பு பணமாக சுவிஸ் வங்கிகளில் சேமிப்பதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

  சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிஸ் வங்கிகளில் மொத்தமாக சுமார் CHF6.65டிரில்லியன் தொகை சேமிப்பில் இருப்பதாகவும், இதில் 48 விழுக்காடு உலக நாடுகளில் இருந்து சேமிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

  கருப்பு பணம் குவியும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து மாட்டுமல்ல கேமன் தீவுகள், ஹாங்காங், சிங்கப்பூர், லக்சம்பர்க், ஜேர்மனி, தைவான், ஐக்கிய அமீரகம் மற்றும் குயெர்ன்சி ஆகிய நாடுகளும் கருப்பு பண விவகாரத்தில் செல்வந்தர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
இந்தியச் செய்திகள்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink