சுவிட்சர்லாந்தின் St Gallen-ல் பர்தாவுக்கு தடை? மக்களிடம் வாக்கெடுப்பு,
 • சுவிட்சர்லாந்தின் St Gallen-ல் பர்தாவுக்கு தடை? மக்களிடம் வாக்கெடுப்பு,

  சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் பர்தா அணிவதைத் தடை செய்வது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

  பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பர்தா முதலானவற்றைத் தடை செய்யக்கோரி இளம் சமூக ஆர்வலர்கள் வாக்கெடுப்பு பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

  சிலர் தொடங்கிய வாக்கெடுப்புக்கான பிரச்சாரத்தையடுத்து, St Gallen நகரில் வசிக்கும் வாக்காளர்கள் பர்தா அணிவதைத் தடை செய்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்காக வாக்களிக்க உள்ளனர்.

  கடந்த வருடம் St Gallen பகுதி நாடாளுமன்றம் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பர்தா முதலானவற்றை அணிவதைத் தடை செய்யும் மசோதா ஒன்றை ஏற்றுக்கொண்டது.

  வாக்கெடுப்புக்கான பிரச்சாரத்தையடுத்து அதை பொது வாக்கெடுப்புக்கு கொண்டு வருவதற்கு தேவையான 4000 கையெழுத்துக்களுக்கு அதிகமாகவே பெறப்பட்டுவிட்டதால், St Gallen நகரில் வசிக்கும் வாக்காளர்கள் இப்போது இறுதி வாக்கெடுப்பிற்கு தயாராகிவிட்டார்கள்.

  கடந்த சில ஆண்டுகளாகவே சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவது குறித்த விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

  கடந்த ஆண்டு Glarus நகர மக்கள், முகத்தை மறைப்பதைத் தடை செய்யும் சட்டம் ஒன்றை ஏற்க மறுத்தார்கள். சுவிஸ் ஃபெடரல் நாடாளுமன்றமும் நாடு முழுவதும் இத்தகைய தடை விதிப்பதற்கு வழிவகை செய்யும் மசோதா ஒன்றை ஏற்க மறுத்தது.

  எப்படியானாலும் இவ்விடயத்தை பொது வாக்கெடுப்புக்கு கொண்டு வருவதற்கு தேவையான கையெழுத்துக்கள் கிடைத்துவிட்டதால் வாக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும்.

  இந்த நிலையில் அரசாங்கம் இன்னொருவரை முகத்தை மறைக்கும்படி கட்டாயப்படுத்துவதற்கு தடை விதிக்கும் முன்மொழிவு ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.

  ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று சுவிஸ் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பர்தாவை தடை செய்வதை ஆதரிப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
ஆய்வுக் கட்டுரை
தொழில் நுட்பம்
சரித்திரம்
 மரண அறித்தல்