சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தாய்நாட்டு குடியுரிமையை இழக்க வேண்டும்,
 • சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தாய்நாட்டு குடியுரிமையை இழக்க வேண்டும்,

  சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டினர்கள் அவர்களின் தாய் நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும் என்ற கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய கட்சியும் அகதிகளுக்கு எதிரான கொள்கைகளை உடைய கட்சியுமான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) தான் நாடாளுமன்றத்தில் இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

  இக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Erich Hess என்பவர் அரசிற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

  அதில், ‘சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினர் ஒருவர் விண்ணப்பம் செய்த பிறகு அவர் தன்னுடைய தாய்நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும்.

  ஏனெனில், தாய்நாட்டின் குடியுரிமை இல்லாமல் சுவிஸ் குடியுரிமை மட்டும் பெற்றிருந்தால் அவர் சுவிஸ் நாட்டின் மீதும் குடிமக்கள் மீதும் அதிகளவில் ஈடுப்பாடு கொள்வார்.

  இதுமட்டுமில்லாமல், சுவிஸில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்களுக்கு இங்கு அதிகளவில் சலுகைகள் கிடைக்கிறது.

  குறிப்பாக, எளிதாக பணிக்கு செல்லும் அனுமதியும், சமூக நலத்திட்ட உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், இவை சுவிஸ் குடிமக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.

  எனவே, சுவிஸில் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினர்கள் முதலில் எந்த நாட்டின் மீது அதிகளவு பற்றுதல் வைத்துள்ளனர் என்பதை நிரூபிக்க வேண்டும் என Erich Hess கூறியுள்ளார்.

  சுவிஸ் மக்கள் கட்சியின் இக்கோரிக்கைக்கு பிற கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து Cedric Wemuth என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பேசியபோது, ‘சுவிஸ் மக்கள் கட்சியின் இக்கோரிக்கை அர்த்தமற்றது.

  சுவிஸில் பல நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் சுவிஸ் குடியுரிமையுடன் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களால் சுவிஸ் நாடு பாதிகப்படவில்லை.

  குறிப்பாக, இரட்டை குடியுரிமை உள்ள வெளிநாட்டினர்களால் சுவிஸ் நாட்டிற்கு மதிப்பு அதிகரிக்கும்.

  அதாவது, சுவிஸ் குடியுரிமை பெற்ற ஒரு வெளிநாட்டினர் இரட்டை குடியுரிமையையும் பெற்றிருந்தால் அவரது தாய்நாட்டில் சுவிஸ் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என Cedric Wemuth பதிலளித்துள்ளார்.

  சுவிஸ் மக்கள் கட்சி அளித்துள்ள இந்த கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது.

  எதிர்வரும் பெப்ரவரி 12-ம் திகதி அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக நாடு முழுவதும் வாக்குப்பதிவிற்கு பிறகு இக்கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
தையல்
மருத்துவம்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort