சுவிட்சர்லாந்தில் வெளியுலக தொடரிலிருந்து துண்டிக்கப்பட்ட நகரம்,
 • சுவிட்சர்லாந்தில் வெளியுலக தொடரிலிருந்து துண்டிக்கப்பட்ட நகரம்,

  சுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிந்து வரும் நிலையில், ரயில் பாதைகளில் பனிப்பாறைகள் விழுந்து மூடிக் கொண்டதால் Zermatt கிராமமே முற்றிலும் வெளி உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது.

  சமீபத்தில் கூட அக்கிராமத்தில் உள்ள ரிசார்டில் 13,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

  சூப்பர் மார்க்கெட்களில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பு இல்லை என்றெல்லாம் சுவிஸ் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

  Holiday transfers, #Swiss style! When you can’t get in by train, Air Zermatt runs shuttles to #Zermatt! #holidayvacation #trip #holidayplanning #switzerland #snowedinnoproblem #powder #travel #ski#skiing #snow #snowing #matterhorn #cervinia pic.twitter.com/aTSeLiEhVd

  — Matterhorn Diamonds (@MatterhornDiamo) January 22, 2018

  இதையெல்லாம் கேள்விப்படும்போது Ski resortஇற்குள் சிக்கிக் கொண்ட Zermatt கிராமத்திலுள்ள மக்கள் மீது பரிதாபப்படத் தோன்றுகிறது அல்லவா?

  ஆனால் உண்மையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த Zermatt கிராமத்திலிருக்கும் சிலர், தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

  அவர்கள் கூறுகையில், Zermattஇலுள்ள Ski resort இப்போது எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல உணர்கிறோம், தட்ப வெப்ப நிலை அருமையாக இருக்கிறது, பனிச்சறுக்கு விளையாடும் இடங்கள் திறந்தே இருக்கிறது, நாங்கள் வெளி உலகிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறோம் என்கிற உணர்வே தோன்றவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  2nd night stranded in Zermatt. We are 1,100 on waiting list for helicopter. At least it's stopped snowing now. pic.twitter.com/B4bcZWNwjT

  — Carra (@DaveCarraCPFC) January 23, 2018

  இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  Our own private ski resort #Zermatt #Matterhorn pic.twitter.com/ISJDQZJORO

  — SkiBoutique (@SB_Ski_Boutique) January 23, 2018

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
தங்க நகை
வினோத நிகழ்வுகள்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்