சுவிஸ் மருத்துவமனையில் கணவர் மற்றும் மனைவி தற்கொலை,
 • சுவிஸ் மருத்துவமனையில் கணவர் மற்றும் மனைவி தற்கொலை,

  சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் வயதான தம்பதி துப்பாக்கியால் சுட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Affoltern am Albis நகரில் உள்ள மருத்துவமனையிலேயே நேற்று இத்துயர சம்பவம் நடந்துள்ளது.

  நோயாளிகள் அறையில் இருந்து வந்த துப்பாக்கிச் சத்தங்களைப் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் சென்று பார்த்த போது, 83 வயதான நோயாளி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.

  அருகில் அவரது கணவரும் ரத்த வெள்ளத்தில் குண்டடிபட்ட காயங்களுடன் கிடந்தார், மருத்துவர்கள் தீவிர முயற்சிகள் செய்தபோதிலும் பயனில்லாமல் இருவரும் மரணித்தனர்.

  கணவர் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  எனினும் இதுவரை கொலையா தற்கொலையா என பொலிசார் உறுதிப்படுத்தவில்லை.
  https://www.thelocal.ch/20180110/suspected-murder-suicide-in-swiss-hospital

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
சினிமா
தங்க நகை
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்