புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும் சுவிஸில் நாடுகடத்தப்படுவார்களா,
 • புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும் சுவிஸில் நாடுகடத்தப்படுவார்களா,

  சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது அந்நாட்டு மாகாண அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

  சுவிஸில் உள்ள 26 மாகாணங்களிலும் சுயாட்சி நடைபெற்று வருகிறது. அதாவது, மாகாண அரசுகளின் உத்தரவின் அடிப்படையில் தான் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  இதுபோன்ற ஒரு சூழலில், புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது ஒவ்வொரு மாகாணமும் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பது தற்போது தெரியவந்துள்ளது.புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் மீது அதிகளவில் கண்டிப்பு காட்டாமல் அக்கறை செலுத்தி வரும் மாகாணங்களில் முதலில் இருப்பது Vaud மாகாணம் தான்.

  இந்த மாகாணத்தில் புகலிடம் மறுக்கப்பட்டால், வலுக்கட்டாயமாக யாரையும் பொதுவாக வெளியேற்றுவது கிடையாது. உதாரணத்திற்கு, இந்த மாகாணத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் 100 புலம்பெயர்ந்தவர்கள் Renens நகரில் முகாம்கள் அமைத்து பல மாதங்களாக தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  இது குறித்து வாட் மாகாண அரசு கருத்து தெரிவித்தபோது, ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீது கண்டிப்பு காட்டுவது உண்மை தான். ஆனால், குற்றம் செய்யாமல் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் நாங்கள் வித்தியசமான அனுகுமுறையை கையாண்டு வருகிறோம்.

  இதன் மூலம், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட வசதிகளை அளித்து அவர்களது தாய்நாடுகளுக்கு திரும்புமாரு கேட்டுக்கொள்கிறோம்.

  இந்த அனுகுமுறை மூலம் நிதி அதிகமாக செலவானாலும் கூட, தாய்நாடுகளுக்கு திரும்பி அங்கேயே தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக ஜெனிவா, Schaffhausen மற்றும் Zug ஆகிய மூன்று மாகாணங்கள் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் அக்கறையாக நடந்துக்கொள்கிறது.

  ஏனைய மற்ற மாகாணங்கள் சராசரி விகிதத்தில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டாலும்,
   1-Aargau,
  2-Graubunden,
  3-Lucerne,
  4-St Gallen,
  5-Ticino,
  6-Thurgau
  7-Valais
  ஆகிய 7 மாகாணங்கள் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்கின்றன.

  இவற்றில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களிடம் Graubunden மாகாணம் சற்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது. புகலிடம் மறுக்கப்பட்டவர்களை இம்மாகாண அரசு நேரடியாக வெளியேற வலியுறுத்தாது.

  இதற்கு மாறாக, புகலிடம் மறுக்கப்பட்டு Dublin ஒப்பந்த நாடுகளுக்கு செல்ல உத்தரவிடப்பட்ட நிலையிலும் அவர்கள் வெளியேற மறுத்தால், அவர்கள் அனைவரையும் Graubunden மாகாணத்தில் உள்ள நாடுகடத்தப்படும் சிறையில் தங்க வைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
சட்டம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலக செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink