பாரீஸில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்,
  • பாரீஸில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்,

    பாரீஸில் இயங்கும் பொது போக்குவரத்து வாகனங்களில் வரும் யூன் மாதம் முதல் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை நகர மேயர் அன்னி ஹிடால்கோ புதன்கிழமை காலை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி மாதம் €2,200-க்கும் குறைவான வருமானம் பெறும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் டிராம், மெட்ரோ, பேருந்து, RER ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம்.

    இதற்கான இலவச Navigo பாஸ் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் வயதானவர்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை உபயோகிப்பது ஊக்குவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் சுமார் 200,000 பேர் பயனடைவார்கள் என மேயர் அன்னி கூறியுள்ளார்.

    அதே சமயத்தில் இலவசமாக பொது போக்குவரத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் பாரீஸில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
சாதனையாளர்கள்
சிறுவர் உலகம்
சினிமா
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink