பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல்,
 • பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல்,

  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஹொட்டல் ஒன்றில் நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம ஆயுத கும்பல் ஒன்று £4மில்லியன் மதிப்பிலான தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பாரிஸில் உள்ள பிரபல Ritz ஹொட்டலில் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளதாக பிரெஞ்சு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  முகமூடி அணிந்து துப்பாக்கி மற்றும் கோடரியுடன் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை அந்த பெட்டியை உடைத்து அள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

  சம்பவத்தின் போது குறித்த கொள்ளையர்கள் ஹொட்டல் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியால் 10 சுற்று சுட்டதாகவும் கூறப்படுகிறது.

  இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அடுத்து திரளான பொலிசார் குறித்த ஹொட்டல் அருகாமையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

  இதனிடையே கொள்ளையர்களில் இருவரை கைது செய்துள்ளதாகவும் எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

  Ritz ஹொட்டலானது உலகின் மிக அதிக வசதிகள் கொண்ட ஹொட்டல்களில் ஒன்றாகும்.

  உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களே இங்கு அதிகமும் வருகை தருபவர்கள். குறித்த ஹொட்டலானது எகிப்திய செல்வந்தரான Mohamed Al-Fayed என்பருக்கு சொந்தமானதாகும்.

  பிரித்தானிய இளவரசி டயானவுடன் சாலை விபத்தில் உயிரிழந்த Dodi Al-Fayed என்பவரின் தந்தையே இந்த Mohamed Al-Fayed.

  பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல், பாரிஸில் தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு சென்ற மர்ம ஆயுத கும்பல்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
ஆய்வுக் கட்டுரை
இலக்கியம்
 மரண அறித்தல்