சுவிஸ் நாட்டின் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடும் அங்கு அரசியலில் உள்ள தமிழர்களும்,
 • சுவிஸ் நாட்டின் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடும் அங்கு அரசியலில் உள்ள தமிழர்களும்,

  Migration என்பது ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு பிறிதொரு நாட்டுக்குச் செல்லுதலாகும். யுத்தத்தின் காரணமாகவோ அல்லது பொருளாதாரப் பிரச்சனை காரணமாகவோ இது நடைபெறலாம். இவ்வாறே பல நாடுகளிலிருந்து பலர் சுவிஸ் நாட்டிற்கு வருவதால், அது சுவிஸ் நாட்டில் பல உள்ளாக்கப்பிரச்னைகளைக் கொண்டுவருகின்றது.

   சுவிஸ் நாட்டிற்கு வருபவர்களின் சொந்தநாட்டுடன் இணைந்து சுவிஸ் அரசாங்கம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வினைக் காண விளைகிறது. இதன் அடிப்படையிலே இலங்கையுடன் Migrationsabkommen (அதாவது இடப்பெயர்வு தொடர்பான உடன்படிக்கை ஒன்றில்) சுவிஸ் அரசாங்கம் 04.10.16 அன்று கைச்சாத்திட்டது.

  சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் நீதி மற்றும் காவற்துறைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த உடன்படிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நபர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் இரு நாட்டின் கூட்டுநடவடிக்கையாகும் என்பதால், அந்தக் கூட்டுநடவடிக்கை தொடர்பான சட்டங்கள் சாராம்சம் இந்த உடன்படிக்கையில் உள்ளடங்கியிருகிறது.

  இருப்பினும் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். அவர்களின் இணையதளத்தில் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவெனில், இந்த உடன்படிக்கை எதிர்காலத்தில் வரக்கூடிய „இடப்பெயர்வு தொடர்பான கூட்டாண்மைக்கான (Migrationspartnerschaft) அத்திவாரமேயாகும். ஆனால் இந்தக் கூட்டாண்மையை முன்னெடுப்பதற்கு மனித உரிமைகளில் மேம்பாடுகலள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்.

  இருப்பினும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு தனிமனிதர்கள் என்ற அடிப்படையில் பிரச்சனை இல்லை. அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் தான் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்த் தேசிய இனம் வரலாற்று ரீதியாக தனது இறைமையை இழந்து, அதன் காரணமாக மொழிரீதியாக, கலை பண்பாட்டுரீதியாக, அரசியல்ரீதியாக இறுதியில் வன்முறைரீதியாக அடக்கி அழிக்கப்படத் தொடங்கியது.

  அதற்கு எதிரான அரசியற் போராட்டங்கள் தோல்விபெற, ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களின் இறைமை மீட்கப்பட்டது. 2009ம் ஆண்டு இந்த இறைமை அழிக்கப்பட்டு, அதற்குப் பிற்பாடு ஒரு கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பு தமிழர்களுக்கு எதிராக ஏவப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

  ஆனால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலில் தமிழர்கள் தமிழர்களாகவே கருதப்படவில்லை என்பதே உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் உள்ள „தமிழ்“ மற்றும் „தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வடக்குப் பகுதி“ என்னும் சொற்பிரயோகமே உபயோகிக்கப்பட்டுள்ளது.

  அத்தோடு தேசிய நல்லிணக்கம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்ததன் மூலம், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு இலங்கையர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல. சுவிஸ் அரசாங்கம் விரும்பும் கூட்டாண்மையின் ஒரு நிபந்தனை இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு நெருங்கிய உறவும் மற்றும் ஒரு ஸ்திரத்தன்மையும் ஆகும். சுவிஸ் நாட்டு அரசாங்கத்திற்க்கு  தமிழர்கள் தொடர்பாக சில விடயங்களை தெளிவாக  கவனத்திற் கொள்ள வைக்க வேண்டும்.

  1: தமிழர்கள் ஒரு தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் இலங்கையர்கள் அல்ல அதனால் அவர்கள் ஈழத் தமிழர்கள்,

  2: தமிழர்களின் பாரம்பரியமான தாயகம் தமிழீழம் என்று அழைக்கப்படும்.

  3: தமிழர்களுக்கு பாரம்பரியமான இறைமை இருந்தது. அதனை அவர்கள் இழந்தற்குப் பிற்பாடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தங்களின் இறைமையை மீளப் பெற்றனர்.

  4: தமிழர்கள் தங்களின் தேசிய அடையாளம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்த்தினால் பல வகையாக அடக்கப்பட்டனர்.

  4: தமிழர்களின் இறைமை இனவழிப்பு நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டு, அதன் பிற்பாடு தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

  சுவிஸ் அரசாங்கம் தமிழர்களின் அடையாளத்தினையயும் மற்றும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும் நிராகரித்தால், அது அவர்கள் விரும்பும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். என்பதை சுவிஸ் அரசுக்கு தெளிவு படுத்த வேண்டும்,

  சுவிஸ் நாட்டில் உள்ள தேசியக் கட்சிகளில் பங்கு வகிக்கும் தமிழர்களின் நிலை என்ன
  இலங்கை அரசோடு சுவிஸ் அரசு பல உடன்படிக்கைகளைச் செய்துள்ளது. இந்த உடன்படிக்கையை சுவிஸ் நாட்டின் SP கட்சியினைச் சார்ந்தவரே கைச்சாட்டித்திருந்தார். அந்த SP கட்சியில் பல தமிழர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்கள் தமிழர்களின் அடிப்படைகளைத் தெரிந்தோ தெரியாமலோ மழுங்கடித்து எதனைச் சாதிக்கப்போகின்றனர் என்ற கேள்விகளும் உருவாகின்றன.
  https://www.sem.admin.ch/…/internat-zusarbeit/bilateral.htm
  https://www.sem.admin.ch/sem/de/home/themen.html
  https://www.sem.admin.ch/sem/de/home/ueberuns/kontakt.html
  https://www.eda.admin.ch/eda/de/home/vertretungen-und-reisehinweise/laenderunabhaengigereiseinformationen/reisehinweise-kurzerklaert.html
  https://www.ejpd.admin.ch/…/aktue…/news/2016/2016-10-04.html

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
மங்கையர் மருத்துவம்
வினோத நிகழ்வுகள்
ஆன்மிகம்
 மரண அறித்தல்