அரசுப்பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து 2 பேர் பணம் வசூலித்து ஓட்டம்,
 • அரசுப்பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து 2 பேர் பணம் வசூலித்து ஓட்டம்,

  தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடிக்கிறது திருவாரூரில் அரசுப்பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து 2 பேர் பணம் வசூல் செய்து ஓட்டம் பிடித்தனர்.#BusStrike

  தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது.

  இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைவான பஸ்களே ஓடியதால் அதில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.இந்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடிக்கிறது.

  இதனால் தனியார் பஸ்களை அரசு இயக்கி வருகிறது .மேலும் அரசு பேருந்துகளில்  தற்காலிக டிரைவர்கள்  மற்றும் நடத்துனர்களை கொண்டு இயக்கப்படுகிறது. இதனால்  ஆங்காங்கே  ஓடுனர்களால் விபத்துகளும்  நடத்துனர்களால் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.

  திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 4 பணிமனைகளில் இருந்து மொத்தம் 239 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இதில்  தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  இந்த நிலையில் நாகை செல்லும் அரசுப்பேருந்தில் தற்காலிக நடத்துனராக 2 பேர் பணம் வசூல் செய்துள்ளனர். ஆண்டிப்பாளையம் பகுதியில் டிக்கெட் பரிசோதகரை கண்டவுடன் போலி நடத்துனர் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார். மற்றொரு நடத்துனரை பிடித்து டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
உலக சட்டம்
அரசியல் கட்டுரைகள்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink