இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் யுவதிக்கு நேர்ந்த கதி,
 • இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் யுவதிக்கு நேர்ந்த கதி,

  இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

  நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கள்ட்ரீ பிரதேசத்தில் சுவிஸ் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

  18 வயதான இந்த யுவதியை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த நிலையில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  கடந்த 7ஆம் திகதி 11 மணியளவில் தனியாக குறித்த பகுதியில் நடந்து சென்ற யுவதியிடம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  முறைப்பாட்டுக்கு அமைய நுவரெலிய பொலிஸார் 4 பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  அதற்கமைய நேற்று வரை 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
மங்கையர் மருத்துவம்
இலங்கை செய்தி
மருத்துவம்
 மரண அறித்தல்