சுவிட்சர்லாந்தில் பர்தா அணியத் தடை: பெரும்பாலான மக்கள் ஆதரவு,
 • சுவிட்சர்லாந்தில் பர்தா அணியத் தடை: பெரும்பாலான மக்கள் ஆதரவு,

  பெரும்பாலான சுவிற்சர்லாந்து மக்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தா அணிவதன் மீதான தடையை ஆதரித்துள்ளனர்.

  சுவிஸ் நாட்டு உரிமைப்படி சட்டமன்றம் வழியாக அல்லாமல் மக்களே நேரடியாக சட்டமாக்கும் உரிமை ஒன்று உள்ளது (initiative).

  பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தா அணிவதற்கு தடை விதிப்பதற்கு அழைப்பு விடுக்கும் initiative இன்று வாக்களிப்பிற்கு விடப்படுமானால் சுவிஸ் மக்களில் முக்கால் வாசி பேர் அதற்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள், இதனால் பர்தா அணிவது நிச்சயம் தடை செய்யப்படும் என்பது தெரியவந்துள்ளது.

  இதுகுறித்து வாரப்பத்திரிகைகள் இரண்டு நடத்திய கருத்துக்கணிப்பில் 76 சதவிகிதம் பேர் அதற்கு ஆதரவாகவும் 20 சதவிகிதம் பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். மூன்று சதவிகிதத்தினர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்று Swiss media செய்தி வெளியிட்டுள்ளது.

  உள்ளூர் பாரம்பரியம், குளிர், உடல்நலக்குறைவு மற்றும் பாதுகாப்பு காரணங்கள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதை சட்ட விரோதமானதாக ஆக்குவதற்காக கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட "முகத்திரை மீதான தடையை ஆதரிப்போம்” என்பதற்கு ஆதரவாக 100,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டனர்.

  இத்தகையச் சட்டம் பர்தாவைத் தடைசெய்வதோடு மட்டுமில்லாமல் கலகக்காரர்கள் மற்றும் குற்றம் செய்யும் நோக்கத்தோடு முகத்தை மறைப்பவர்களையும் குறி வைக்கும்.

  சுவிஸ் அரசு இந்தக் கருத்தை எதிர்த்து, இந்த விஷயத்தை மாகாணங்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளது.

  அது டிசம்பர் மாதத்தில், முகத்தை மூடும்படி யாரையும் கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்னும் counter - projectஐ முன் வைத்துள்ளது.

  இரண்டுமே 2019இல் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
சாதனையாளர்கள்
எம்மவர் நிகழ்வுகள்
மருத்துவம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink