சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்,
 • சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்,

  சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் 08,01,2018. காலை 10.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

  குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகின.

  முதற்கட்டமாக இன்று நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான தமது விமர்சனங்களையும், வாதங்களையும் வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.

  இன்றைய பூர்வாங்க விசாரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலுள்ள

  பல்வேறு முரண்பாடுகள், முகாந்தரமில்லாத பல குற்றச்சாட்டுக்களை குற்றம் சுமத்தப்பட்ட தரப்பு வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.

  குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டவிதிகளை மீறியும், அனுமானத்தின் அடிப்படையிலும் சுமத்தப்பட்டவையாக இருப்பதை இவ் வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.

  அத்தோடு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவையென மேற்படி வழக்குரைஞர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.

  இந்த விசாரணைகள் ஆரம்பமான இன்றைய தினம் STA சுவிஸ் தமிழர் அவையினால் “தேசத்துக்காய் உழைத்தோருக்கு உறுதுணையாய் நாமிருப்போம்” என்ற உறுதியோடு சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் கடந்த ஆறு மாதங்களாக சேகரிக்கப்பட்ட 5069 கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. இவை இலத்திரனியல் குச்சியிலும் (Pen Drive) தரவேற்றப்பட்டு நீதிமன்றுக்கும், சடடத்தரணிகளுக்கும் கையளிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

  இன்றைய இந்த பூர்வாங்க விசாரணைகள் தொடர்ந்து நாளையும் இடம்பெறும்.

  இவ்வேளையில் இன்று நீதிமன்றுக்கு வெளியே தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத்துக்கும், தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்களின் நீதிக்காகவும் குரலெழுப்பினர்.

  தமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் குவிந்த மக்கள்,


  சுவிட்சர்லாந்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி விசாரணையை எதிர்கொண்டுவரும் 13 தமிழர்களுக்கு ஆதரவாக டிசினோ மாகாணத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இதில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட தமிழர்கள், தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும், சுதந்திரத்திற்காக மட்டுமே போராடி வருவதாகவும் முழக்கமிட்டுள்ளனர்.

  தமிழ் ஆதரவாளர்கள் பயங்கரவாதிகள் அல்ல என முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகள் மற்றும் கொடிகளுடன் Piazza Governo பகுதியில் குவிந்திருந்தனர்.

  இலங்கையில் மனிதநேய நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் ஒருபோதும் மாநில சட்டத்திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல எனவும் கூறியுள்ளனர்.

  ஆனால் தற்போது நாட்டில் நடப்பவை எதும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

  பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 13 தமிழர்கள் மீது ஃபெடரல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சூரிச், பெர்ன், சோலோதுர்ன் உள்ளிட்ட சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானோர் வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விடுதலைப் புலிகளின் கொடிகளையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது புகைப்படத்தையும் ஏந்தியிருந்ததுடன், குறித்த 13 பேருக்கு ஆதரவாக குரல்கொடுத்திருந்தனர்.

  இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் பலவும் முக்கியத்தும் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

  சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம், சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
சினிமா
இலங்கை செய்தி
 மரண அறித்தல்