கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக முஸ்லீமை நியமித்தது பிள்ளையான் கட்சியே,
 • கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக முஸ்லீமை நியமித்தது பிள்ளையான் கட்சியே,

  கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட்டை பதவிக்கு நியமித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

  மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே துரைராஜசிங்கம் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே ஹாபிஸ் நசீர் அஹமட்டை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டு வந்ததாக துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

  அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் உலக நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களைப் போன்று தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஆட்சி உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் புதிதாக எழுதப்பட்டதாக தெரிவித்த துரைராஜசிங்கம்

  சமஸ்டி என்கின்ற கூட்டாட்சி ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியான செயற்பாடுகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சாதனையாளர்கள்
சரித்திரம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink