ஜேர்மனியில் கைவரிசையை காட்டிய அகதி,
 • ஜேர்மனியில் கைவரிசையை காட்டிய அகதி,

  சாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி ஒருவரிடம் பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நாட்டின் ரீஸ் நகரில் உள்ள தஞ்சம் கோருவோருக்கான வீட்டில் தங்கிருந்த 29 வயதான அகதி சில தினங்களுக்கு முன்னர் சாலையில் சென்ற 50 வயது நபரை தான் வைத்திருந்த கோடாரியால் மிரட்டியுள்ளார்.

  அவரிடம் இருந்த பணத்தை கேட்டு அகதி மிரட்டிய நிலையில் பயந்து போன நபர் பணத்தை கொடுத்துள்ளார்.

  இது நடந்து 20 நிமிடங்கள் கழித்து காரில் சென்று கொண்டிருந்த ஒரு தம்பதியை வழிமறித்த அகதி அவர்களை தாக்கியதோடு, கார் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.

  பின்னர் அங்கிருந்து அகதி தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் குற்றவாளி சிவப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற முக்காடு போன்ற தொப்பியை அணிந்திருந்தாக தெரியவந்துள்ளது.

  இந்த சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என கூறியுள்ள பொலிசார் குற்றாவாளியை தேடி வருகிறார்கள்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
வினோத நிகழ்வுகள்
விவசாயத் தகவல்கள்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்