பிரித்தானியாவில் புதிய சட்டம் : 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடை,
 • பிரித்தானியாவில் புதிய சட்டம் : 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடை,

  பிரித்தானியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகளவான அமிலத்தன்மை கொண்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

  சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இதன்படி, 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பின்வரும் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்தவகையில்,

  சில பொருட்கள் வடிகால் மற்றும் வண்ணப்பூச்சு ஸ்ட்ரிப்பர்ஸ் போன்ற சோடியம் ஹைட்ராக்சைட்டின் 12% அல்லது அதற்கும் மேல் உள்ள பொருட்கள்.செங்கல் மற்றும் உள் முற்றம் கிளீனர்கள் இதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் 10% அல்லது அதற்கு மேற்பட்ட எந்த திரவப் பொருட்களும்.அம்மோனியம் ஹைட்ராக்சைடு மற்றும் சோடியம் ஹைபோக்ளோரைட் ஆகியவற்றின் 10% அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள்: பல துப்புரவு பொருட்கள் உள்ளடங்கியது. பொய்சன்ஸ் – அமிலப் பாவனை சட்டத்துடன் இணங்குவதற்கும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் கடைகளுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.

  இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவின் மிகப்பெரிய விற்பனையாளர்களான Wickes, B&Q, Screwfix and Tesco நிறுவனங்கள் தடைப்பட்டியலில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  மேலும், இணையம் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது வயதெல்லையை அறிந்துகொள்ளும் நடைமுறையொன்றை கையாளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  குறித்த விடயம் தொடர்பில், Crime, Safeguarding and Vulnerabilityக்கு பொறுப்பான அமைச்சர் Victoria Adams இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

  “அசிட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீது ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான வடுக்களை ஏற்படுத்தி உள்ளன.

  அந்த வகையில் பிரித்தானியாவில் உள்ள சில்லறை மற்றும் மொத்த வியாபார நிறுவனங்கள், இந்த திட்டத்துடன் இணைந்து அமில தாக்குதல்களை கட்டுப்படுத்தவதற்கு போராடுவார்கள் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்தியச் செய்திகள்
வினோத நிகழ்வுகள்
தையல்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink