பெற்றோரை கொலை செய்ய உணவில் விஷத்தை கலந்த மகன்,
 • பெற்றோரை கொலை செய்ய உணவில் விஷத்தை கலந்த மகன்,

  பிரித்தானியாவில் பெற்றோரை கொலை செய்ய உணவில் விஷத்தை கலந்த மனநலம் சரியில்லாத மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

  நாட்டின் பெட்போர்ட்ஷயர் கவுண்டியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ரிச்சர்ட் ஹிக்நெட் (32) என்ற இளைஞர் தனது பெற்றோர்களான ஜேம்ஸ் மற்றும் ஸ்டெப்னியுடன் வசித்து வந்த நிலையில் அவர்களை கொல்ல கடந்த மார்ச் மாதம் திட்டம் தீட்டியுள்ளார்.

  அந்த சமயத்தில் ரிச்சர்டின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி ஒருவரை சத்தமில்லாமல் கொல்வது எப்படி என இணையத்தில் தேடியுள்ளார்.

  இதையடுத்து அவர்கள் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொல்ல ரிச்சர்ட் முடிவெடுத்தார்.

  பெற்றோர் சாப்பிடும் பப்ஸ் உணவில் விஷத்தை கலந்து அவர்களுக்கு கொடுக்க இருவரும் மயங்கியுள்ளனர்.

  24 மணி நேரம் கழித்து ஜேம்ஸ் நினைவு தெளிந்து எழுந்த நிலையில் பொலிசுக்கு போன் செய்துள்ளார்.

  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

  ரிச்சர்ட்டை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பெற்றோரை கொல்ல வில் அம்பு ஒன்றையும் ரிச்சர்ட் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

  தற்போது நீதிமன்ற உத்தரவுபடி ரிச்சர்ட் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  இதனிடையில், தங்கள் மகனின் செயலை மன்னித்துவிட்டதாகவும், அவர் கொடூரமான மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிச்சர்டின் பெற்றோர் கூறியுள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மரண அறிவித்தல்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்