சர்வதேச நாடுகள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை,
 • சர்வதேச நாடுகள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை,

  மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளமையை தொடர்ந்து

  இலங்கைக்கு உதவி வழங்கி வரும் சர்வதேச நாடுகள் அதிருப்பதி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், சர்வதேச நாடுகளிடம் இருந்து எதிர்காலத்தில் நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  “பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் தனது விசாரணை அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.

  இதன்மூலம் குறுகிய காலத்தில் பெருமளவான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்து சர்வதேச நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.

  அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் குறிப்பிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

  அபிவிருத்திகளுக்காக வழங்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

  இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் இடம்பெறுமாக இருந்தால் தொடர்ந்தும் இலங்கை நிதியுதவிகளை எதிர்பார்க்க முடியாது என பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

  மேலும், பிணைமுறி மோசடிக்கு அனைத்து அரசியல் வாதிகளுகம் பொறுப்பு கூற வேண்டும் என கொழும்பில் உலக வங்கியின் பிரதிநிதி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துரையாடியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
மங்கையர் மருத்துவம்
வீடியோ
தங்க நகை
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink