மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள ஆயிரம் இலங்கை தமிழர்கள் தாயகம் செல்ல விருப்பம்,
 • மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள ஆயிரம் இலங்கை தமிழர்கள் தாயகம் செல்ல விருப்பம்,

  ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் ஆயிரம் பேர் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் போர் முடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் புலம் பெயர்ந்தோர் நாடு திரும்பலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில் மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் இலங்கை செல்ல விரும்புபவர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கப்பல் மூலம் செல்ல அகதிகள் விருப்பம் தெரிவித்தனர்.

  இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக பல லட்சம் தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். அவ்வாறு வந்த அகதிகள், தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 107 முகாம்களில் 19,200 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் அகதிகள் வசித்து வருகின்றனர்.

  2009ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தநிலையில், அகதிகளாக வந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இலங்கைக்கு திரும்பி சென்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,700 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். வடமாகாணத்தில் அமைதி திரும்பி வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளதுடன், வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

  இதனால் இந்த ஆண்டு தமிழக முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் 1000 பேர் இலங்கை செல்ல விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தாயகம் திரும்பி செல்ல ஐ.நா அகதிகளுக்கான அமைப்பு உதவி செய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் 550 குடும்பங்களை சேர்ந்த 1,800 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

  இவர்களில் தற்போது ஆயிரம் பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். 500 பேர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் வரும் 9ம் தேதி வரை அகதிகள் முகாம்களில் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
தையல்
உலக சட்டம்
உலக செய்தி
 மரண அறித்தல்