மத்திய அரசை பார்த்தாலே நடுங்குகிறது தமிழக அரசு,
 • மத்திய அரசை பார்த்தாலே நடுங்குகிறது தமிழக அரசு,

  சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன் பேட்டி, ஆளுநர் உரையில் விவசாயிகளின் எந்த பிரச்சனைகள் குறித்து குறிப்பிடவில்லை என சட்டப்பேரவைக்கு வெளியே சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன் பேட்டியளித்துள்ளார். அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஆளுநர் உரையில் எந்த குறிப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  ஆளுநர் உரையாற்றியதே தவறு

  சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றியதே தவறு என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். பெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரிக்கும் வகையில் ஆளுநர் உரையாற்றியுள்ளார். தொழில்தொடங்க வங்கிக்கு அளிக்கும் திட்டவரைவு போல ஆளுநர் உரை உள்ளது.

  நடுங்கும் தமிழக அரசு

  மத்திய அரசை பார்த்தாலே நடுங்குகிறது தமிழக அரசு என டிடிவி விமர்சித்துள்ளார். நடுங்கும் தமிழக அரசால் மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி பெற முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  கூடங்குளத்தில் பாதுகாப்பு இல்லை

  தரம் குறைந்த பாகங்களால் கூடங்களத்தில் அணுமின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டுகிறது. பழுது காரணமாக இதுவரை 40 மறை அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது என  டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கூடங்குளம் சுற்றியுள்ள மக்களை பாதுகாக்க ஆளுநர் உரையில் உத்திரவாதம் இல்லை என டிடிவி தெரிவித்துள்ளார். கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

  சம்பிரதாய ஆளுநர் உரை

  ஓகி புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிக்க ஆளுநர் உரை வலியுறுத்தவில்லை என டிடிவி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை சம்பிரதாயம் போல இருந்தது. ஓகி புயலால் காணாமல் மீனவர்களை சரியாக தேடவில்லை என மத்திய, மாநில அரசுகள் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
சரித்திரம்
இந்திய சட்டம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்