சட்டப்பேரவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் - டி.டி.வி தினகரன் சந்திப்பு,
 • சட்டப்பேரவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் - டி.டி.வி தினகரன் சந்திப்பு,

  தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை முடிந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் சந்தித்துக்கொண்டனர்.

  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினர். ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

  ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் சென்ற டி.டி.வி தினகரன் ஆளுநர் உரை முடியும் வரை உள்ளே இருந்தார்.

  ஆளுநர் உரை முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்று கூறினார். எதிர்க்கட்சி என்றாலும் தி.மு.க உடன் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இதனையடுத்து, அவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் மற்றும் தினகரன் சந்தித்து கொண்டனர்.

  முன்னதாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தினகரன் சிரித்துக்கொண்டே நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சுவிஸ் செய்தி
மருத்துவம்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்