கப்பல் மூலம் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுங்கள்,
 • கப்பல் மூலம் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுங்கள்,

  உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த அகதிகள், மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் இலங்கை செல்ல விரும்புபவர்கள் குறித்து விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம், இலங்கைக்கு கப்பல் மூலம் செல்ல அகதிகள் விருப்பம் தெரிவித்தனர்.

  மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் விசாரணை செய்த மத்திய குழு

  இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக பல லட்சம் தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 107 முகாம்களில் 19,200 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரம் பேர் அகதிகளாக தங்கியுள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தநிலையில்,

  அகதிகளாக வந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இலங்கைக்கு திரும்பி சென்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,700 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த ஆண்டு இலங்கை திரும்ப 800-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்  550 குடும்பங்களை சேர்ந்த 1,800 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம், மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இன்று விசாரணை மேற்கொண்டனர்.

   உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசந்த் ஜித் தேவ், சதீஷ்குமார் சிங், ஶ்ரீனிவாசன் மற்றும் தமிழக மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் தியாகராஜன் ஆகியோர் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம், இலங்கைக்கு திரும்பி செல்வது குறித்தும், முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு செய்து தரப்படும் உதவிகள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
வீடியோ
சினிமா
உலக செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink