பரப்புரைக் கூட்டங்களில் மட்டுமே பனர்கள், கட்அவுட்களுக்கு அனுமதி,
 • பரப்புரைக் கூட்டங்களில் மட்டுமே பனர்கள், கட்அவுட்களுக்கு அனுமதி,

  இரவு பிரச்சாரத்துக்கு தடை, இரவு ஏழு மணியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

  உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் வீடு வீடாகச் சென்று தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்று நிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இசை குழுக்கள் மற்றும் கட்சி கொடிகளை ஏந்திக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் செயற்படும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை இழக்க நேரிடலாம் என சுற்று நிருபத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுவரொட்டிகள், பெனர், கட்அவுட் போன்றவற்றை தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் போது மட்டும் காட்சிப்படுத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

  “சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்படும் சுவரொட்டிகள், பெனர் மற்றும் கட்அவுட்டுக்களை அப்புறப்படுத்துவதுவதைத் தவிர, வேறு மாற்றுத் தீர்வுகள் இல்லை. இதுவிடயம் தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து விவரங்களை கையளிக்க வேண்டும் . அவ்வாறு சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் அரசியல் அலுவலகங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
சரித்திரம்
இந்திய சட்டம்
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்