மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற நடிகர்களை, வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிகை,
 • மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற நடிகர்களை, வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிகை,

  பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் தமிழ் நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு மலேசியாவில் நடைபெறும் தமிழ் நட்சத்திர கலை விழாவிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான உறுப்பினர்கள் பதவி வகிக்கின்றனர்.

  இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

  இதில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர்.

  முன்னதாக நேற்று முன்தினம் கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நடிகை ஷோபனா குழுவினரின் நாட்டியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

  ரஜினி புதிய கட்சி தொடங்கியுள்ளார். கமல் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து இருக்கிறார்.

  இந்த நிலையில் மலேசிய நட்சத்திர கலைவிழாவில் இருவரும் என்ன பேசுவார்கள், கமல் தனது அரசியல் கட்சி பற்றி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து இந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

  எனவே இந்த விழாவில் மலேசிய பிரதமர் மற்றும் அந்நாட்டு மந்திரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பிரபலங்கள் மத்தியில் இந்த கலை நிகழ்ச்சி வரவேற்ப்பு பெற்றாலும் மலேசிய தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நடிகர் சங்க கட்டிடம் கட்ட மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற நடிகர்களை வெளுத்து வாங்கியுள்ளது மலேசியப் பத்திரிக்கை.

  அதில், கோடி கோடியாக உழைக்கும் இவர்கள் இப்படி பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன...?

  மக்களுக்காக இதுவரை எதாவது நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு உதவியது உண்டா எனக்கேட்டால் இல்லவே இல்லை.

  வருடா வருடம் அவாடு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடாத்தி கோடி கோடியாக உழைத்தவர்கள் மக்கள் நலனுக்காக எதையுமே செய்ததில்லை.

  புயல் தாக்கம்,வெள்ள அழிவு போன்ற இயற்கை பேரிடர்களுக்கு நிகழ்ச்சி நடத்தி உதவாத இவர்கள் இன்று தமக்காக பிச்சையெடுக்க கிளம்பிவிட்டனர்.

  மலேசியா மக்களே இவர்களை செருப்பால் அடித்து விரட்டுங்கள் இனியும் ஏமாறாதீர்கள்' என்று குறிப்பிட்டு உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
ஆன்மிகம்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink