பிரித்தானியாவில் பீதியை ஏற்படுத்தியுள்ள வைரஸ் காய்ச்சல் : 23 பேர் உயிரிழப்பு,
 • பிரித்தானியாவில் பீதியை ஏற்படுத்தியுள்ள வைரஸ் காய்ச்சல் : 23 பேர் உயிரிழப்பு,

  பிரித்தானியாவில் Aussie flu என்ற காய்ச்சல் பரவி வரும் நிலையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.

  இதுகுறித்த எச்சரிக்கையை பிரித்தானியாவின் அரசு சாரா சுகாதார மையமான NHS வெளியிட்டுள்ளது.

  நாட்டில் உள்ள மருத்துவமனைகள் காய்ச்சலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதோடு Norovirus என்னும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வைரஸும் நாட்டில் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது.

  Aussie flu ஏ மற்றும் பி என இருவகைப்படும், இதில் ஏ வகை வைரஸுக்கு H3N2 என்ற பெயர் உள்ள நிலையில் அதுதான் இந்தாண்டு பிரித்தானியாவில் பரவி வருகிறது.

  இதே வைரஸால் முன்னர் அவுஸ்திரேலியா பாதிப்படைந்த நிலையில் தற்போது பிரித்தானியா பாதிப்படைந்துள்ளது.

  இதுகுறித்து சுவாச நோய்கள் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பிபோடி கூறுகையில், அவுஸ்திரேலியாவில் H3N2 காய்ச்சலால் அதிகம் பேர் உயிரிழந்தார்கள், முதியவர்களை தான் இந்த காய்ச்சல் அதிகம் தாக்குகிறது.
  பொதுவான அறிகுறிகள் அதிக காய்ச்சல்உடல் வலிகள் உடல் சோர்வுதலைவலி வறட்டு இருமல்

  தடுப்பூசி போட்டு கொள்வதே காய்ச்சலிலிருந்து தப்பிக்க சிறந்த வழியாகும்.

  காய்ச்சல் குறித்து தெளிவுப்படுத்த NHS கர்ப்பிணி பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறது என கூறியுள்ளார்.

  காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட,
  நல்ல ஓய்வும் தூக்கமும் அவசியம்உடல் வறட்சியை தடுக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், சிறுநீர் இள மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டியது அவசியம்.உடல் வெப்பநிலை மற்றும் வலிகளை குறைக்க paracetamol அல்லது ibuprofen மாத்திரைகளை சாப்பிடலாம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
இலங்கை செய்தி
விவசாயத் தகவல்கள்
ஆன்மிகம்
 மரண அறித்தல்