இலங்கையில் தமிழர்கள் எத்தனை சத விகிதம்,1950 நிலவரப்படி தமிழர்களில் மண்ணின் மைந்தர்கள் எத்தனை பேர்,
 • இலங்கையில் தமிழர்கள் எத்தனை சத விகிதம்,1950 நிலவரப்படி தமிழர்களில் மண்ணின் மைந்தர்கள் எத்தனை பேர்,

  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich-Switzerland.தமிழர்களின் எண்ணிக்கை என்று பார்க்கும் பொழுது, தமிழர்களிடையே இருக்கும் பிரிவுகளை முதலில் கவனிக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  இவர்கள் ஈழத்தை அடிப்படையாக கொண்ட ஈழத்தைச் சேர்ந்த பூர்வீக தமிழர்கள்/ஈழத்தமிழர்கள்/இலங்கை தமிழர்கள்.

  வடக்கு கிழக்கு பகுதியான தமிழ் ஈழத்தில் தான் ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையினர். தமிழ் ஈழப் பகுதிகளில் இவர்களின் எண்ணிக்கை சுமார் 80% என நினைக்கிறேன். (இது சரியான புள்ளி விபரம் அல்ல, ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன்). அவர்களைச் சார்ந்த போராட்டம் தான் தற்பொழுது ஈழத்தில் நடைபெறுகிறது. ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தான் அதிகம் உள்ளனர்.

  குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னர், வவுனியா, திருகோணமலை, மட்டகளப்பு போன்ற பகுதிகளில் ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையினர். அதிலும் வடக்குப் பகுதியான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற பகுதிகள் தமிழர்களில் 95% உள்ளனர். கிழக்கு பகுதிகளில் (திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை) தமிழர்களின் பெரும்பான்மை சிங்கள குடியேற்றத்தால் படிப்படியாக குறைக்கப்பட்டது என்பதை இங்கு சுட்டிகாட்ட வேண்டும்.

  மொத்த இலங்கையை கொண்டு கணக்கிட்டால், 1950ல் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 13% என நினைக்கிறேன். ஆனால் மொத்த இலங்கையை கொண்டு தமிழர்களின் எண்ணிக்கையை கூறுவது தேவையில்லாதது. பல நேரங்களில் மொத்த இலங்கையையும் சார்ந்த எண்ணிக்கை தான் சிங்கள ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகிறது. மொத்த இலங்கையையும் தனிநாடாக தமிழர்கள் கோருவதில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழ் ஈழப் பகுதியை தான் தமிழர்கள் தனி நாடாக கோருகின்றனர்.

  மலையக தமிழர்கள்/இந்திய தமிழர்கள்

  இவர்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்காக கொண்டு செல்லப்பட்டவர்கள். மலையக தமிழர்கள் பெரும்பாலும் மத்திய இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்கள் சார்ந்த பகுதிகளில் தான் உள்ளனர். மலையக தமிழர்கள் ஈழப் போராட்டங்களில் தங்களை "ஓரளவுக்கு" மட்டுமே இணைத்து கொண்டிருக்கின்றனர்.

  ஆனால் முழுமையாக அல்ல. அதற்கு காரணம் மலையக தமிழர்களின் அரசியல் தலைமை தான் என்று சொல்ல முடியும். சரியான அரசியல் தலைமை மலையக தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தமிழர்களின் மனித உரிமைக்காக குரல் கொடுத்து வரும் மனோ.கணேசன் போன்றவர்கள் மலையக தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  அது மட்டுமில்லாமல் இந்தியத் தமிழர்கள் இருக்கும் இடங்கள் தமிழ் ஈழம் பகுதி அல்ல. அதனை தமிழ் ஈழப் பகுதியாக கோருவதும் இல்லை. எனவே அவர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தில் தங்களை இணைத்து கொள்வதற்கான பெரிய தேவை எதுவும் இல்லை. மொத்த இலங்கையில் இவர்கள் சுமார் 6%

  மூஸ்லீம்கள்

  இவர்கள் மூர் இனத்தினர். இவர்கள் அரேபியாவில் இருந்து வந்தவர்கள். மூஸ்லீம்கள் கிழக்கு மாகாணங்களில் தான் அதிகம் வசிக்கின்றனர் (அம்பாறை போன்ற பகுதிகள்). இவர்களின் பேச்சு மொழி தமிழ் தான் என்றாலும் இவர்கள் முஸ்லீம்களாக தான் பார்க்கப்படுகின்றனர். தமிழர்களாக பார்க்கப்படுவதில்லை. இது தமிழக சூழலில் இருக்கும் பலருக்கு வியப்பாக இருக்கும்.

  காரணம் தமிழகத்தில் மூஸ்லீம், இந்து, கிறுஸ்தவர் போன்ற பேதங்கள் இல்லை (சங்பரிவார் கும்பல் அவ்வாறான பேதங்களை உருவாக்க முனைந்து வருகிறது). அனைவருமே தமிழர்களாக தான் கருதப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. மூஸ்லீம்கள் தங்களை சிங்களவர்களுடன் இணைத்து கொள்வதும், தமிழர்களுக்கு எதிரான அரசியல்களில் ஈடுபடுவதாலும் அவர்களை தமிழர்களாக பார்க்க முடிவதில்லை.

  மொத்த இலங்கையில் இவர்கள் சுமார் 7%

  மொத்த தமிழர்கள் (ஈழத் தமிழர்கள், இந்திய/தமிழக தமிழர்கள், முஸ்லீம்கள்) என்று பார்க்கும் பொழுது இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இலங்கையில் சுமார் 30% தமிழர்கள் இருந்தனர். போர் காரணமாக பலர் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து விட்ட சூழ்நிலையில் தற்பொழுது அது மிகவும் குறைவாக இருக்கும்.

  இலங்கையின் இனப்பிரச்சனை சிங்கள அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான சூழ்ச்சியே. சாமானிய சிங்கள மக்கள் இந்த தொடர்ச்சியான போரினால் என்ன லாபம் கண்டார்கள் ? ஒன்றுமே இல்லை. போர், ஒரு சாமானிய சிங்கள இளைஞனை இராணுவத்தில் இணைய வைத்திருக்கிறது. இராணுவத்தில் இணைந்தால் தான் வேலை வாய்ப்பு. இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற நிலை தான் அங்கு உள்ளது. தமிழ் மக்களின் எதிரிகள் சிங்கள மக்கள் அல்ல. சிங்கள அரசியல்வாதிகளும், அவர்களைச் சார்ந்த பொளத்த இனவாதமுமே. அதற்கு வித்திட்டவர் இலங்கையின் முதல் தலைமை அமைச்சர் (பிரதமர்) சேனநாயக்கே. (அப்பொழுது இலங்கையில் பிரதமருக்கு தான் அதிகாரங்கள் இருந்தன. ஜெயவர்த்தனே ஆட்சி காலத்தில் தான் ஜனாதிபதிக்கு அசுர அதிகாரங்களை வழங்கும் அரசியல் சட்டமாற்றம் செய்யப்பட்டது).

  1948ல் குடியுரிமைச் சட்டத்தை சேனநாயக்கே கொண்டு வந்தார் (Citizenship Act of 1948). இந்த சட்டத்தின் படி இந்தியத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே. அப்பொழுது சிங்கள இனவாதம் சார்ந்த சூழல் இல்லை. தங்களின் அரசியல் சுயநலத்திற்காக சிங்கள அரசியல்வாதிகள் படிப்படியாக அவ்வாறான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

  இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது தன்னுடைய அரசியல் பலத்தை நிலைநிறுத்திக் கொள்ள சேனநாயக்கே செய்த முதல் தவறை இன்று வரை அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் செய்து வருகிறார்கள். இன்றைய ராஜபக்ஷவின் போர் கூட தன்னுடைய அரசியல் பலத்தை நிலை நிறுத்திக் கொள்ள செய்யப்படும் முயற்சியே. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் உடனே தென்னிலங்கையில் தேர்தல் நடக்கும். அதற்கு தான் இந்தப் போர்.

  1948ம் ஆண்டுக்கு வருவோம்.

  டான் ஸ்டீபன் சேனநாயகா,

  சேனநாயக்கே ஐக்கிய தேசிய கட்சியை (UNP) சேர்ந்தவர். 1947 பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் பாராளுமன்றத்திற்கான மொத்த 95 இடங்களில் 41 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கவில்லை. பாரளுமன்றத்தில் சுமார் 40% இடங்களை இலங்கையின் இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மையினர் பெற்றிருந்தனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மையினரைச் சார்ந்தே ஆட்சி அமைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என சேனநாயக்கே அஞ்சினார். தன்னுடைய அரசியல் பெரும்பான்மையை தக்க வைக்க அவர் கொண்டு வந்த சுயநலத்திட்டம் தான் Citizenship Act of 1948. இதன் காரணமாக இந்தியத் தமிழர்கள் தங்களின் குடியுரிமையை, அதாவது தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர். இந்தியத் தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்காவிட்டால் யாருக்கும் லாபம் ? சேனநாயக்கேவுக்கு தானே ? அதனால் தான் இந்தியத் தமிழர்களில் குடியுரிமையை பறிக்கும் காரியத்தைச் செய்தார்.

  இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிக இடங்களை பெரும் வாய்ப்பு ஏற்பட்டது. சேனநாயக்கே திட்டமிட்டது போலவே அடுத்த தேர்தலில் - 1952 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 52 இடங்களைப் பெற்றது. தன்னுடைய அரசியல் சுயநலத்திற்காக சேனநாயக்கே விதைத்த விதையை இன்றளவும் சிங்கள அரசியல்வாதிகள் தண்ணீர் ஊற்றி ஆலமரமாக வளர்த்துள்ளனர்.

  ஆனால் இங்கே குறிப்பிட வேண்டியது ஒன்றுள்ளது. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துக்கூடிய சாத்தியங்களையும் சிங்கள அரசியல்வாதிகள் கண்டு கொண்டனர். 1948ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டத்தை தமிழ் காங்கிரஸ் ஆதரித்தது. தமிழ் காங்கிரஸ் தலைவரான ஜி.ஜி.பொன்னம்பலம் இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்தை ஆதரித்தார். இதனால் தமிழ் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. இதற்கு பிறகு ஜி.ஜி.பொன்னம்பலம் தன்னுடைய செல்வாக்கினையும் தமிழர்களிடையே இழந்தார்.

  தமிழ் தேசியத்தின் தந்தை என்றும், தந்தை செல்வா என்றும் அழைக்கப்படும் எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் 1948ம் ஆண்டு குடியுரிமைச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். தமிழ் காங்கிரஸ் பிளவு கண்டது. தந்தை செல்வா பிடரல் கட்சி என்ற கட்சியை தோற்றுவித்தார். பின்னாளில் அது தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) என்ற பெயரில் தமிழ் ஈழமே தமிழர்களுக்கான முழுமையான தீர்வு என்பதை முன்வைத்தது.


  ஜி. ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வா,
  எம். திருச்செல்வம்

  (ஜி.ஜி.பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததை மட்டுமே முன்வைத்து மாலன் போன்ற தமிழக பத்திரிக்கையாளர்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள், இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்ததை ஆதரித்ததாக போலியான தோற்றத்தை உருவாக்குகின்றனர். ஆனால் மாலன் ஈழத்தமிழர்களை அதிகளவில் முன்னிறுத்திய தந்தை செல்வாவின் எதிர்ப்பை வசதியாக மறப்பது ஏனோ? இது தான் வரலாற்றை திரிப்பதாக நாங்கள் சொல்கிறோம்)

  1948 குடியுரிமைச் சட்டத்தை சிங்கள இடதுசாரிகளும் தீவிரமாக எதிர்த்தனர். ஆனால் அவர்கள் இதனை இனப்பிரச்சனையாக பார்க்கவில்லை. முதலாளித்துவம் தொழிலாளர்கள் இடையேயான பிரச்சனையாகவே பார்த்தனர். ஆனால் தந்தை செல்வா இதனை தெளிவாக இது எதிர்காலத்தில் ஒரு இனப்பிரச்சனையாக உருவெடுக்கும் என கூறினார். அவ்வாறே நடந்தது.

  1951ல் ஐக்கிய தேசிய கட்சி (UNP) பிளவு கண்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி Sri Lanka Freedom Party (SLFP) என்ற புதிய கட்சியை பண்டாரநாயக்கே தோற்றுவித்தார். 1956 தேர்தலில் சிங்கள மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக கொண்டு வரும் இனவாத கோஷத்தை பண்டாரநாயக்கே முதலில் முன்வைத்தார். 1956 தேர்தலில் இந்த கோஷம் மூலம் பண்டாரநாயக்கே வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்றதும், இதனை சட்டமாகவும் கொண்டு வந்தார் - Sinhala Only Act. தேர்தலில் வெற்றி பெற இனவாதத்தை தொடர்ந்து விதைத்த சிங்கள அரசியல்வாதிகளுக்கு பண்டாரநாயக்கே ஒரு முன்மாதிரி.

  ஆயுதம் ஏந்தும் முன்பாக தமிழர்கள் ஜனநாய முறையில் போராடி தோற்ற வரலாறு

  1956ம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் அமைதி வழியிலேயே நடந்தது. காந்தீய வழியில் தமிழர்கள் சத்தியாகிரகம் செய்தனர். ஆனால் அந்தப் போராட்டத்தை அடக்க குண்டர்களை சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்தினர். இலங்கையைச் சார்ந்த பத்திரிக்கையாளர் சிவநாயகம், தன்னுடைய "SRILANKA: WITNESS TO HISTORY" என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

  The Tamil Fedral Party under the leadership of that gentle christian Samuel James Chelvanayakam believed in the Philosophy of non-violent action as a way of protest against injustice. Tamils had traditionally come under the influence of the Indian Gandhian movement for independence from the time of the Jaffna Youth congress of the 1920s and 30s. The value of the concept of Satyagraha was, unlike in the case of the singhalese, ingrained in the Tamil mind. It is this that led them to organise what they believed was a peaceful satayagraha at the Parliament (Against the introduction of the "singhala only" bill in parliament on June 5, 1956)

  The moment the volunteers and leaders reassembled at the hotel end (Galle Face), a waiting mob of more than a thousand sinhalese toughs fell on them like a pack of wolves in a most inhuman and cowardly attack. They (the satyagrahis) were thrashed and felled prostrate on the ground. Their placards were seized and the wooden poles used as clubs.Some were trampled upon, kicked, beaten and spat upon.

  Not even a single satyagrahi raised in retaliation....

  தமிழர்கள் சத்தியாகிரகம் செய்தாலும், இலங்கையின் முதல் இனக்கலவரத்தை சிங்கள அரசியல்வாதிகள் நடத்தினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தன் அனுபவத்தை சிவநாயகம் பின்வருமாறு கூறுகிறார்.

  A gang of thugs stormed into my compartment making threatening noises against all Tamils, and there I was, the only Tamil around, an obvious sitting target. They came for me. The ruffian in front barged in, swept my glasses off my face, and began dragging me... Except my black coated neighbour who was trying to reason out with my attackers not to harm me (who was immediately silenced with a blow on his face) the others merely watched, the women with sullen disapproval, but all of them fearing to come to my defence. The intention of ruffians was very clear. they had a brilliant thought in their heads, to push me out of the moving train!.....

  Looking back at my train experience that morning, it dawned on me, at the 25th year of my life that bitter truth...I was a Tamil

  1956ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்ற பொழுது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 2 வயது மட்டுமே என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

  தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து 1957ல் பண்டாரநாயக்கே-செல்வநாயகம் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இது தான் பண்டாரநாயக்கே-செல்வநாயகம் உடன்படிக்கை (the Bandaranaike Chelvanayakam Pact) என்று கூறுவார்கள். இந்த உடன்படிக்கை இலங்கை அரசியல் சாசனத்தை கூட்டாட்சியாக மாற்றுவது, தமிழ்-சிங்கள மொழிகளுக்கு சமமான அந்தஸ்து, இந்தியத்தமிழர்களின் குடியுரிமையை பறித்ததை விலக்கி கொள்வது போன்றவற்றை முன்வைத்து செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கையை சரியாக அமல் செய்திருந்தால், இலங்கையில் இனப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

  ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இதனை தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதியது. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ஜெயவர்த்தனே தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி போராட்டத்தில் குதித்தது. புத்த பிக்குகளும் போராட்டத்தில் குதித்தனர். இதையெடுத்து ஜூலை 1957ல் செய்யப்பட்ட பண்டாரநாயக்கே-செல்வநாயகம் உடன்படிக்கையை 1958ல் பண்டாரநாயக்கே விலக்கி கொண்டார்.

  தமிழர்கள் மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர். மற்றொரு இனக்கலவரம் 1958ல் நடந்தது. பல நூறு தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர்.


  சாலமன் W.R.
  பண்டாரநாயகா
  1959ல் பண்டாரநாயக்கே ஒரு புத்த பிக்குவால் படுகொலை செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து இவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கே 1960ல் இலங்கை பிரதமரானார். உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை இவருக்கு இருந்தாலும், இவர் எந்தவகையிலும் ஒரு மாறுபட்ட அரசியலை முன்வைக்கவில்லை. தன்னுடைய கணவரின் அதே இனவாத அரசியலை தான் சிறீமாவோ பண்டாரநாயக்கே முன்வைத்தார். சிங்களத்தை மட்டுமே அரசாங்க அலுவலக மொழியாக அறிவித்து, ஆங்கிலத்தை விலக்கினார்.

  இதை எதிர்த்து 1961ல் தமிழர்கள் பெருமளவில் சத்தியகிரக போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த சத்தியாகிரக போராட்டத்தை கடும் இராணுவ நடவடிக்கை மூலமாக சிறீமாவோ பண்டாரநாயக்கே ஒடுக்கினார். ஆயுதங்களே இல்லாமல் அமைதியாக காந்தீய வழியில் போராடிய தமிழ் சத்தியாகிரக போராட்டங்களை கடுமையான இராணுவ பலம் கொண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கே ஒடுக்கினார்.

  இது குறித்த முழுமையாக தகவல்களை இந்தச் சுட்டியில் படிக்கலாம்
  http://www.tamilnation.org/nadesan/senate_speeches/610502emergency.htm

  "...The voice of the representatives of the Tamil people has been virtually silenced. The military have been let loose on the Northern and Eastern Provinces and from all accounts are behaving - at any rate so far as the Jaffna Peninsula is concerned - as if they were a conquering army in occupation of enemy territory....(In) the early hours of the 18th (of April) the military, without any warning and without informing the satyagrahis assembled at the Jaffna Kachcheri that an emergency had been declared, assaulted the men satyagrahis mercilessly, bundled the women satyagrahis into trucks and transported them. The military also vented their wrath on a large number of push bicycles and even on some motor cars parked at the Kachcheri gates. If the reports are true, the army seems to have displayed considerable courage and valour in their attacks on unarmed 'satyagrahis and on inanimate objects like push bicycles! Certain Government quarters, I am told, believe that the Ceylon Army had covered itself with glory when, under the cover of darkness and armed with modern weapons, it routed a band of unarmed satyagrahis in what will go down in history as the "Battle of Jaffna"!... Immediately the "Battle of Jaffna" was over, the army proceeded to waylay and hit all and sundry on t he roads of Jaffna on the ground that they were breaking a curfew order, of which most of them were unaware."

  சிறிமாவோ பண்டாரநாயகா

  சிவநாயகம், "SRILANKA: WITNESS TO HISTORY" என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
  The period of 1956 to 1960 was one of signifiance for another reason... The realisation had come that Tamils as a People could never expect a fair deal under a unitary set-up where power was permanently entrenched in a numerically powerful sinhala majority

  சிங்கள மக்களுடன் ஒரே நாட்டில் வாழ முடியாது என்ற நிலைக்கு தமிழ் மக்கள் 1960லே வந்து விட்டதாக சிவநாயகம் கூறுகிறார்.

  இதையடுத்து 1971ல் தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்ற சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்ற சட்டம், 1977ல் சிலோன் (Ceylon) என்று அழைக்கப்பட்ட இலங்கை சிங்களமயமாக்கப்பட்டு சிறீலங்கா (Sri Lanka) என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட சட்டம் என தமிழர்களை தொடர்ந்து மறுக்கும் சட்டங்களை சிங்கள அரசியல்வாதிகள் கொண்டு வந்தனர். 1970களில் பல வன்முறை வெறியாட்டங்களை சிங்கள அரசு அரங்கேற்றியது.

  இந்த அத்தனை சட்டங்களையும் கொண்டு வந்தவர் சிறீமாவோ பண்டாரநாயக்கே. ஆனால் அவரையும் அவர் மகள் சந்திரிகா குமாரதுங்காவின் இனவாத வன்முறை வெறியாட்டத்தையும் "பெண்" "பெண்" என்று ஜல்லியடித்தே தமிழகத்தில் உள்ள தமிழ் நடுநிலைவாதிகள் அவர்கள் மீது ஒரு மாறுபட்ட பார்வையை ஏற்படுத்தி விட்டனர். என்னைப் பொறுத்தவரை அவர்கள் பெண்களா, ஆண்களா என்பது முக்கியமில்லை. அவர்கள் தமிழ் மக்கள் மீது தொடுத்த இராணுவ வெறியாட்டத்தை தான் முக்கியமாக நினைக்கிறேன்.

  இதையடுத்து 1977 பொது தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு - தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) முதல் முறையாக "தமிழ் ஈழமே முழுமையான தீர்வு" என்பதை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது. தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தமிழ் ஈழத்தையே முன்வைத்தது.

  1977 தேர்தலில் சிறீமாவோ பண்டாரநாயக்கே கடும் தோல்வி அடைந்தார். அவருடைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 8 இடங்களையே கைப்பற்றியது. மொத்தமுள்ள 168 இடங்களில் 140 இடத்தைப் பிடித்து அசுர பலத்துடன்

  ஜூனியஸ் ரிச்சர்ட்
  ஜெயவர்த்தனா
  ஜெயவர்த்தனேவின் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியைப் பிடித்தது.

  ஆனால் தமிழ்ப் பெரும்பான்மையான பகுதிகளில் இலங்கையின் இரு பெரும் கட்சிகளும் நிராகரிக்கப்பட்டன. TULF சுமார் 14 இடங்களை கைப்பற்றினர். இலங்கைப் பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியாக இருந்ததும் TULF தான்.

  இங்கு கவனிக்க வேண்டியது, தமிழ் ஈழத்தை முதன் முதலில் விடுதலைப் புலிகள் முன்வைக்க வில்லை. தேர்தல் பிரச்சாரமாக TULF முன்வைத்ததை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஏற்று கொண்டு தேர்தலில் 1977ல் வாக்களித்தனர்.

  இந்தக் காலக்கட்டத்தில் தான் தொடர்ச்சியான சிங்கள இனவாதத்தை எதிர்த்து ஆயுதக் குழுக்களும் தங்கள் போராட்டத்தை தொடங்கியிருந்தன. 1972ல் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கினார்.

  தமிழ் ஈழமே தங்களுடைய தீர்வு என்று வாக்களித்த பெரும்பான்மையான தமிழர்களுக்கு 1977ல் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தோ, வேலுப் பிள்ளை பிரபாகரன் குறித்தோ ஒன்றுமே தெரியாது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சினிமா
மருத்துவம்
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort