6 வது அரசியலமைப்பும் அதை வைத்து புலம்பெயர் தேசங்களில் நடக்கும் கூத்துக்களும்,
 • 6 வது அரசியலமைப்பும் அதை வைத்து புலம்பெயர் தேசங்களில் நடக்கும் கூத்துக்களும்,

  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich Switzerland.எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி பெறும் தகைமையில்லாதோரெல்லாம் ஆய்வாளர்களாகிப் போன துன்பியற் சூழலில் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே எடுத்துச் சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை எனக்கு உள்ளது.

  6வது அரசியலமைப்பு தொடர்பான பாலர் பாடம் நடப்பதைத் தெரிந்ததும் இவ்விடயம் தொடர்பாக உங்களுக்கு எடுத்துக் கூறவேண்டிய கடப்பாடு உள்ளதால் இந்தப் பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

  ஆயிரக் கணக்கான சட்டத்தரணிகள் கை ஒப்பம் வைத்தால்தான் தமிழர்களுக்கு நடந்த சட்டம் சார்ந்த கொடுமையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை ஐக்கிய நாடுகள் அவைக்குக் கொண்டு செல்ல கோடிக் கணக்கான சட்டத்தரணிகளின் கை ஒப்பம் தேவையா.

  பாராளுமன்ற அரசியலின் கையாலாகாத்தன்மையைக் குறிப்பிட்ட ஒரு கட்சியின் இரண்டகமாகக்  கதையளப்பவர்கள், தாம் அவ்வழி நின்று எதுவெல்லாம் செய்வோமெனக் கூற அதையே நம்பி ஏமாறும் இன்றைய இளவட்டங்களும்  அரசியல் வரட்சியில் உலவித் திரியும் ஒரு சில முதியோரும் இனியும் ஏமாறாதிருக்க  6 ஆம் திருத்தச் சட்டத்தை அவர்கள் கூடுமிடங்களில் பேசு பொருளாக்கியே தீர வேண்டுமென்றெண்ணி அது குறித்துத் தொட்டுச் சென்று அரசியற் தெளிவூட்டுவதை இக்கட்டுரை  முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.

  1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம், 1956, 1958, 1977, 1981 களில் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான தமிழினப் படுகொலைகள், 1972 இல் கொண்டு வரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் எனக் கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பை சிங்கள பௌத்த அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாகச் செய்து வந்த மனித  குல எதிர்ச் செயற்பாடுகளின் கேவலங்களுக்கெல்லாம் கேவலமாக உச்சக் கட்ட சிங்கள இனவெறியுடன் 1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் படுகொலையின் பின்னர் துரித கதியில் உலகெங்கிலும் தமிழர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சென்றுவிடாமல் தடுப்பதற்காக அப்போதைய சிங்கள பௌத்த அரச பயங்கரவாதத்தின் தலைவராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்பவனால் 6 வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

  எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்காகத் தமிழீழத் தனியரசு அமைக்கும் வரலாற்று முதன்மை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976-05-14 அன்று பிரகடனம் செய்த பின்னர் புரட்சிகர விடுதலை இயக்கங்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் அந்தத் தீர்மானத்தைச் செயலாக்க உறுதியாக வரிந்து கொண்டு களத்திலும் புலத்திலும் செயலாற்றியமை பன்னாட்டளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதும் இதனைத் தடுத்துவிட  குள்ளநரி ஜே.ஆர். ஜெயவர்த்தனா 6 ஆம் திருத்தச் சட்டம் என்ற அடிப்படை மாந்த உரிமைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

  1983-08-08 அன்று சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான மீறல்களைத் தடுப்பதற்கான திருத்தம் 6 வது திருத்தமாக சிறிலங்காவின் அரசியலமைப்பிற் செய்யப்பட்டது. இந்த 6 வது திருத்தச் சட்டமானது ஐ.நாவின் சாசனங்களையும் அடிப்படை மாந்த உரிமைகளையும் அப்பட்டமாக மீறும் செயலாகும்.

  சிறிலங்கா அரசியமைப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 157 (A) பிரிவின் படி, குறிப்பாக சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான எல்லா வகையிலான மீறல்களையும் தடைசெய்கின்றது.

  மேலும் பிரிவு 157 A (1) இன் படி எந்த ஒரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சிறிலங்காவிற்குள் இருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனி நாட்டினை அமைப்பதற்கு ஆதரவளிக்கவோ, அதற்கு இணங்கி நடக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ மற்றும் ஆதரவு திரட்டவோ கூடாது என பரிந்துரை செய்கின்றது.

  மேலும் பிரிவு 157 (2) இன் படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் தனிநாடமைப்பதனைத் தனது நோக்கங்களில் ஒன்றாகவோ அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகவோ கொண்டிருக்கக் கூடாது.

  மேற்போந்த பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளவற்றை மீறுபவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றால் விசாரணையின் பின்னர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுத் தண்டனையாகக் கீழ்வருவனவற்றை அனுபவிக்க நேரும் எனப் பிரிவு 157 (3) உறுதிப்படுத்துகின்றது.

  அந்த நபரின் குடிமை உரிமைகள் (Civic Rights) 7 ஆண்டு காலத்திற்கு நீக்கப்படும்.

  இதன் கீழ்க் குற்றமிழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தவிர அவருக்கு உரித்துடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

  அவர் 7 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறு குடிமை உரிமைகளுக்கு உரித்து அற்றவராவார்..

  அவர் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும்.

  பிரிவு 157(4) இன் படி, ஒரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாட்டை நிறுவ முனைந்தால், சிறிலங்காவின் குடிமகனாகவுள்ள எவரேனும் அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்புத் தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகத் தனிநாடமைப்பதைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பின் செயலாளரை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யலாம்.

  பிரிவு 157 (5) இன் படி, உச்ச நீதிமன்றம் இந்த முறையீட்டினை ஏற்றுக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்பு தடை செய்யப்படும்.

  மேலும் பிரிவு 157 A இன் கீழ் 7 வது அட்டவணைப்படி மற்றும் பிரிவு 161 (d) (iii) இன் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவியேற்கையில் அவர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கேற்ப சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாடமைக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்க, நிதியளிக்க, ஊக்குவிக்கச் செய்யேன் என சிறிலங்காவின் ஒற்றையாட்சி மீது பற்றுறுதியுடன் உறுதியேற்கிறேன் என உறுதிமொழியேற்க வேண்டும்.

  ஆனால், ஒற்றையாட்சி சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை ஏற்று உறுதிமொழி ஏற்க மறுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இழந்து அவர்கள் தமது நடவடிக்கைகளை பாராளுமன்றிலும் முன்னெடுக்க முடியாமல் போனதுடன் மக்களோடு மக்களாக அந்த மண்ணில் நின்று நெஞ்சுரத்துடன் உறுதியாகப் போராடக் கூடிய வர்க்கப் பண்பும் அந்த மேட்டுக்குடிக் கனவான்களிடமில்லை என்பதால் இந்தியாவிற்குப் போய் ஒழிந்துகொண்டார்கள்.

  வரலாறு இவ்வாறிருக்க………….

  பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் (TGTE) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பல இரகசியக் கூட்டங்களில் கலந்துகொண்டு விடுதலைப் புலிகளின் இலக்கான தனித் தமிழீழத்தை நோக்கிச் செயற்பட்டு ஆறாம் திருத்தத்தின் வாயிலான அரசியலமைப்புச் சட்டத்தினை மீறியுள்ளனர் எனக் குற்றஞ் சுமத்தி சிங்கள பௌத்த பேரினவாதப் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சித் சொய்சா என்பவர் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் வைக்கப்பட்டது.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக 6 வது திருத்தச் சட்டத்தினை மீறியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கையில், தாம் ஒற்றையாட்சிக்கு உண்மையாக இருக்கப் போவதாகவும் தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் ஏற்கவில்லையென்றும் த.தே.கூட்டமைப்பானது பாராளுமன்ற அவைத் தலைவராகிய சபாநாயகருக்கு எழுத்து மூலம் உறுதியளித்துத் தன்னிருப்பைக் காத்துக் கொண்டது.

  இது நடந்த போது ஆறாவது திருத்தச் சட்டம் என்ற ஐ.நாவின் சாசனங்களை அப்பட்டமாக மீறும் அடிப்படை மாந்த உரிமைகளை மறுதலிக்கும் சட்டத்தினை இல்லாதொழிக்காமல் தமிழரின் தன்னாட்சி உரிமை பற்றி வாயே திறக்க முடியாது என்பதனைப் பேசு பொருளாக்காமல் (புலம்பெயர்ந்த பெரும்பாலானோரின் அறிவு வரட்சியும், கஜேந்திரகுமாரின் அரசியல் அறுவடையும் இதற்குக் காரணங்கள்) சம்பந்தன் இரண்டகம் இழைத்துவிட்டதாகப் பரப்புரை செய்து தனது காங்கிரஸ் கட்சியைக் கட்டியமைக்கும் வேலையை மிகத் தெளிவாகக் கஜேந்திரகுமார் முன்னெடுத்தார்.

  (6 வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை சம்பந்தன் மட்டும் அல்ல பாராளுமன்ற அரசியலில் நுழையும் மற்றும் மறப் போராட்டத்தைக் கையிலெடுக்காமல் இருக்கும் அனைவரும் ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுதலித்து இக்கட்டான காலச் சூழல்களில் இரண்டகம் செய்வர் என்பதை இந்தப் பந்தி உங்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது)

  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் 1966 ஆம் ஆண்டு சாசனம் மற்றும் உடன்படிக்கைகளின் படியும் அத்துடன் 1966 ஆம் ஆண்டு பொருண்மிய மற்றும் சமூக உரிமைகள் தொடர்பிலான பன்னாட்டுச் சட்டத்தின் படியும் சர்வதேச நடை முறையை ஏற்று (சிறிலங்கா இவற்றில் கைச்சாத்திட்டுள்ளது) 6 ஆம் திருத்தச் சட்டமானது அப்பட்டமான மீறல் என்பதனை மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் மூலமும் சட்ட நடவடிக்கைகள் மூலமும் அணுகாமல் கஜேந்திரகுமார் செய்த வேலை என்னவென்று பாருங்கள் ,

  சம்மந்தன் தமிழ் மக்களிற்கு இரண்டகம் செய்துவிட்டதாகப் பரப்புரை செய்து தலை தூக்க முடியாமல் சேடமிழுத்துக் கொண்டிருந்த தனது காங்கிரஸ் கட்சியை உயிர்பெறச் செய்வதற்கான வேலையை கஜேந்திரகுமார் முன்னெடுக்க கஜேந்திரகுமாரின் அரசியல் வரட்சியிலிருந்து அரசியல் பேசுவோரும் அதற்க்கு முண்டு கொடுப்போரும் நுண்ணரசியலை ஆய்ந்தறிந்து எதிர்கால அரசியலை தமிழர்களுக்குச் சார்பான ஒரு நிலையை உருவாக்காமல் புதிய அணி ஒன்றை உருவாக்கும் அளவிற்க்கு சிலர் தெரிந்தோ தெரியாமலோ இந்த வலைக்குள் விழுந்துள்ளனர்.

  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களை எதிர் கொள்ள சம்பந்தமே இல்லாதவற்றை ஊதிப் பெருப்பித்து  தனக்குச் சாதகமான அணியமாக்கி எமது வளங்களை ஒன்றிணைக்க வேண்டிய தட்டிக் கழிக்க முடியாத தார்மீகக் கடமையை விளங்குமளவிற்கு அறிவு வளர்ச்சி இல்லாதவர்களை ஒன்றிணைத்து   அதற்கு  இன்றைய சூழலில்  தமிழர்களின் அறவழி அரசியல் வெளி அனைத்தையும் ஒருங்கிணைத்து தங்களது வசதிக்கு ஏற்ப்ப மலர்ப்படுக்கையாகிவிட்டு  முள்ளிவாய்க்காலின்  பின் தமிழர்களை அந்தர நிலைக்கு விட்ட பெருமை இவர்களையே சாரும்.

  மாந்த குலத்தின் உறுப்பினர்கள் அனைவரினதும் உள்ளார்ந்த கௌரவத்தையும் சமவுரிமையையும் ஏற்று நடக்க வேண்டியது இந்த உலக அமைதிக்கும் அறத்திற்கும் அடிப்படையானது என்று உறுதிமொழி தெரிவித்த 1948- 12- 10 அன்று நடைபெற்ற உலக மாந்த உரிமைகள் நாளன்று செய்யப்பட்ட மாந்த உரிமைப் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவின் படி உலகிலுள்ள ஒவ்வொரு மாந்தனுக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உண்டு என்றும் பிரிவு 30 இன் படி இந்த உரிமையை இல்லாதாக்கும் படியான அல்லது மறுக்கும் படியான எந்த நடவடிக்கைகளையும் எந்த நாடோ அல்லது குழுவோ அல்லது நபரோ செய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1955 இல் ஐ.நாவின் உறுப்பு நாடாக இணைந்த சிறிலங்கா ஐ.நாவின் சாசனத்தில் உள்ளடங்கியுள்ள கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளதுடன் தன்னால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கடமைப்பாட்டிலும் உள்ளது ஆனால் இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி தமிழர்தரப்புக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கவேண்டிய நேரத்தில் புதிய கட்சி தொடக்கி அரசியலை வேறு திசைக்கு  நகர்த்தியதைவிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களுக்காக எதைச் செய்தார் என்னும் கேள்விக்கு விடை தெரியவில்லை.

  ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமாரன் அவர்கள் ஐ.நாவின் மாந்த உரிமைகள் மன்றில் 6 ஆம் திருத்தச் சட்டத்தின் அப்பட்டமான மீறல்கள் குறித்து முறையீடு செய்யப்பட்டதுடன் இது குறித்து உலக வாழ் தமிழர்களிடத்திலும் உலகளவிலான சட்டப் புலமையாளர்களிடத்திலும் ஒரு கையெழுத்துப் பரப்புரை செய்தார் இந்தக் கையெழுத்துப் பரப்புரையால் எதைச் சாதிக்க முடியும் என்று இன்றுவரை அவரால் மக்களுக்கு விளங்கப்படுத்த முடியவில்லை அதை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களளுக்கு உரிய வழியில் அவரால் கொண்டு செல்ல முடியவில்லை என்றே கருத வேண்டி உள்ளது.

  எனினும் இது சட்ட நடவடிக்கையென்ற அளவைத் தாண்டி புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலோ அல்லது சர்வதேசத் தமிழர் மத்தியிலே 6 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவோ அதன் நன்மை தீமை தொடர்பாகவோ நாடுவாரியாக தெளிவுபடுத்தி இதை ஒரு மக்கள் திரள் போராட்ட வடிவம் என்றளவில் கூட இதை முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆளுமை அவரிடம் போதியளவு இல்லையென்றே ஐயுறவு கொள்ள வேண்டியுள்ளது.

  ஐ.நாவின் சாசனங்களையும் அடிப்படை மாந்த உரிமை மீறல்களையும் அப்பட்டமாக மீறிய விடயங்களை 6 வது திருத்தச் சட்டமாகத் தனது அரசியலமைப்பில் வைத்துள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தையே சட்ட நடவடிக்கைகள் மூலம் பன்னாட்டளவில் அணுகாமல்அதற்க்கான மாற்றுவழித் தேடலோ அல்லது சர்வதேச சட்டவரயரைக்கு உட்பட நீதிப் பரிகாரம் தேடாமல் இவர்கள் தட்டிக் கழிப்பதன் நோக்கம் என்ன ,

  ஒவ்வொரு வருடமும் தமிழர்களுக்கு நீதி வேண்டுவதாகவும் இலங்கையை போர்க் குற்ற நீதிமன்றில் நிறுத்தப் போவதாகவும்  பிரச்சாரம் செய்து  தங்களைப் பகிரங்கப் படுத்தும் இந்த புலம் பெயர் தமிழர் அமைப்பினர்  இன்றுவரை எதைச் சாதித்தார்கள்  மாறாக ஒவ்வொரு முறையும் ஐ.நா சுற்றுலா சென்று உலகின் வல்லாதிக்க நாடுகளின் திட்டமிடலுடன்  இயங்கும் சில தொண்டு அமைப்புகளின் அனுசரணையுடன் சேர்ந்து பணம் செலுத்தி உப கூட்டங்களை நடத்துகிறார்களே தவிர வேறொன்றும் இல்லை.

  இதில் விசேடமான நிகழ்வு இலங்கையின் 6 அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு  உட்பட சத்தியப் பிரமாணம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் பட்டாளம் ஜெனிவாவில் இடம் பெறும் கூட்டங்களில் கலந்து கொள்வது இன்னும் வேடிக்கையாக உள்ளது அதே 6 வது சட்ட சரத்தின் படி இலங்கை அரசின் இறையாண்மைக்கு குந்தகம் இழைத்ததாக இவர்களது உறுப்புரிமை குடி உரிமை பறிக்கப்பட வாய்ப்பும் உள்ளது  அப்படியான ஒரு நிலை வந்தால் இவர்கள் இவர்களைக் காப்பாற்றுவார்களா இல்லை இவர்களை நம்பிய தமிழ் மக்களைக் காப்பாற்றுவார்களா இவர்களையும் இவர்கள் காப்பாற்ற மாட்டார்கள் தமிழ் மக்களையும் காப்பாற்ற மாட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

  இலங்கையில் இப்போது ஜனநாயகம் நிலை நாட்டப் படுவதாக சர்வதேசம் நம்புகின்றது அங்கு அப்படி எதுவும் இல்லை அங்கு நடந்தது இன அழிப்பு அல்லது போர்க் குற்றம் என்று கூற புலம் பெயர்ந்து வாழும் எந்த ஒரு தமிழர் அமைப்பினாலும் இன்றுவரை ஏன் முடியவில்லை முள்ளிவாக்கால் அவலத்தின் பின் கூட இவர்களால் இலங்கையில் நடந்தது இன அழிப்பா அல்லது போர்க் குற்றமா  என்று சர்வதேசத்தின் முன் கொண்டு செல்லமுடியவில்லை முடியவில்லை  அப்படியானால் இவர்களால் தமிழர்கள் சார்பாக நடத்தப்படும் அமைப்புக்கள் ஏன் எதற்கு என்னும் ஒரு கேள்வி எழுகின்றது.

  இலங்கையில் இப்போது ஜனநாயகம் திரும்பி உள்ளதாக சர்வதேசம் கருதுவதால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சார்பாக பேரணி நடத்தும் தமிழ் அமைப்புக்கள் இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளையோ தமிழ் மக்களையோ ஒரே அணிக்கு திரட்ட முடியவில்லை தற்போது சர்வதேசத்தின் அரசியல் மாற்றத்திற்க்கு ஏற்றவாறு இலங்கையிலோ அல்லது சர்வதேசத்திலோ ஆரோக்கியமான எந்த ஒரு செயலையும் தமிழ் மக்கள் சார்பாக ஏன் செய்ய முடியவில்லை இவர்களுக்கு ஜதார்த்தம் புரியாதா இல்லை தெரியாதா. தெரியவில்லையா.

  கிளிநொச்சில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் மூடப்பட்டவுடந்தான் தமிழீழத்தில் பாரிய தமிழ் இன அழிப்புடன் போர்க்குற்றமும் நடந்தது என்பது சர்வதேசத்திட்க்கும் தெரியும் இன்று வரை ஏன் இந்த விடயத்தை சர்வதேசத்துக்கு தமிழ் அமைப்புக்களால் சுட்டிக் காட்ட  முடியவில்லை வருடா வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு திருவிழாக் கொண்டாடவரும் பிரமுகர்களுக்கு இவ்விடயம் ஏன் நினைவுக்கு வருவதில்லை.

  இனப்படுகொலையைப் (Genocide) போர்க்குற்றங்கள் (War Crimes) என்றும் மனித  உரிமை மீறல்கள் என்றும் அதுவும் இறுதிப் போரில் நடந்த  மனித உரிமை மீறல் (Human Rights Violations at the final stage of the war) என்றும் ஈற்றில் வகுப்புவாத வன்முறை (Communal Violence) என்றளவில் நீர்த்துப்போகச் செய்தமைக்கு முழுப் பொறுப்பையும் புலம் பெயர்ந்துவாழும் தமிழர்கள் சார்பான அமைப்புக்களே பொறுப்பேற்க வேண்டும் குறிப்பாக சர்வதேச ரீதியில் ஜனநாயக அமைப்பு என்று மார்தட்டிக் கொள்ளும் நாடுகடந்த தமிழீழ அரசும் பொறுப்புக் கூறவேண்டும்.

   உலக வல்லாதிக்கங்களாலும் இந்திய அரச பயங்கரவாதத்தாலும் பன்னாட்டளவில் 6 வது திருத்தச் சட்டத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பாராளுமன்ற இயலாமையை இரண்டகமாகக் காட்டிக் கொண்டு காலத்தைக் கடத்தாமல்,

  இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் தமிழர் தரப்பே எதிர்க் கட்சியாக இருந்து கொண்டும் புலம் பெயர் தேசங்களில் உள்ள தமிலர்கலையோ அல்ல தமிழர் அமைப்புக்களையோ ஒரே கட்டுக் கோப்புக்குள் கொண்டுவர முடியவில்லை அதேநேரம் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களோ இலங்கையில் உள்ள தமிழர்களையோ அரசியல் வாதிகளையோ ஒரே கட்டுக் கோப்புக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால் உங்களை எப்படி தமிழ் மக்கள் நம்புவார்கள்  உங்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்தான் கிடைக்கும் என்று ஐயப்பட வேண்டி உள்ளது.

  6 வது அரசியலமைப்பு முழு வடிவம் ஆங்கிலத்தில்.
  http://tamilnation.co/srilankalaws/83sixthamendment.htm

  இலங்கை  அரசியலமைப்பு திருந்தப்பட்டதுஆங்கிலம்.
  https://www.parliament.lk/files/pdf/constitution.pdf

  இந்த கட்டுரை தொடர்பாக தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich Switzerland.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
மங்கையர் பகுதி
தமிழகச் செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort