இளஞ்செழியனின் தீர்ப்பை உறுதி செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்,
 • இளஞ்செழியனின் தீர்ப்பை உறுதி செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்,

  யாழ்ப்பாணம், மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றத்துக்கு 8 பேருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

  டில்லு குறூப் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேரந்த 8 பேர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய் மேன்முறையீட்டு மனுவை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்தார்.

  யாழ்ப்பாணம் மடம் வீதியில் 2012 ம் ஆண்டு ஜூலை 5 ம் திகதி விமலராஜன் விக்னராஜா என்பவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் 8 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

  அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் நடந்த விசாரணைகளின் நிறைவில் கடந்த மே 16ம் திகதி தீர்ப்பளிக்ப்பட்டது.

  சத்தியநாதன் அன்ரனிஸ் அல்லது டில்லு, அரவிந்தன் அலெக்ஸ் மற்றும் சிவேந்திரன் கலிஸ்ரன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

  விஜயரத்தினம் ஜனுசன், ஜெகதீஸ்வரன் டிரெக்ஸ்காந்தன், அருந்தவராஜ் செந்தூரன், பெனடிக்ட் வெஸ்லி ஏபிரகாம், தேவராசா ஹரிசன் ஆகியோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

  அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 8 குற்றவாளிகளும் 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் ஒரு ஆண்டு சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

  நீதவான் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து குற்றவாளிகள் 8 பேர் சார்பிலும் அவர்களது சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.

  மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் ரட்ணசிங்கம் ஜனுசன் மற்றும் பெனடிக்ற் வெஸ்லி ஏபிரகாம் ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிணை விண்ணப்பம் செய்தார். அதனடிப்படையில் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவடையும் வரையில் அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

  இந்த நிலையில் 8 பேரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று வழங்கியது.

  “மேன்முறையீட்டாளர்களால் நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டம், நிகழ்வுத் தவறுகள் எண்பிக்கப்படவில்லை.

  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் மேல் நீதிமன்றம் உறுதி செய்கிறது. குற்றவாளிகளிடம் தண்டம் அறவீடு செய்வது அவசியமானது. எனினும் நீதவான் நீதிமன்றால் அது கருத்திற் கொள்ளப்படவில்லை.

  எனவே 8 சந்தேகநபர்களும் தலா ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணத்தை நீதவான் மன்றில் செலுத்த வேண்டும். அதனை செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாதம் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் ” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

  அத்துடன் மேன்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கப்பட்டதால் மேல் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட இருவரினதும் தண்டனைக்காலம் இன்று ஆரம்பமாவதை நீதவான் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி கட்டளையிட்டார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
சரித்திரம்
உலக செய்தி
உலக சட்டம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink