மஹிந்த அணிக்குள் முற்றியது பிளவு அணைகட்ட அவசர பேச்சுக்கும் உத்தரவு,
 • மஹிந்த அணிக்குள் முற்றியது பிளவு அணைகட்ட அவசர பேச்சுக்கும் உத்தரவு,

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினரிடையே பாரிய பிளவுநிலை ஏற்பட்டிருப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த பிளவுநிலைக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பெசில் ராஜபக்சவும் காரணம் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள சில பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  பதுளையில் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்ட ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதான மக்கள் கூட்டம் நடைபெற்றது.

  ஏனைய மாவட்டங்களில் நடைபெற்ற மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் ஏற்பாடு, ஏனைய அமைப்புக்கள் என்பவற்றுக்கு குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன.

  எனினும் இம்முறை நடைபெற்ற மக்கள் கூட்டத்திற்கு எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியினரில் பலர் முன்வரவில்லை என்று அக்கட்சியிலுள்ள உறுப்பினர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

  இந்த நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுநிலை உக்கிரமடைந்திருக்கின்ற தருணத்தில் நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட சந்திப்பை நடத்த உத்தரவிட்டிருப்பதோடு இதன்போது இந்த பிளவுநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அந்த பேச்சாளர் கூறினார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வீடியோ
உலக செய்தி
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்