நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் : மக்களே அவதானம்,
 • நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் : மக்களே அவதானம்,

  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  இதன் காரணமாக நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு தென் கரையோரப் பகுதிகளிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

  நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.

  வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  மேற்கு, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதேவேளை பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன் துறை வரையிலான கடற் கரையோரப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதோடு அச்சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும். எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
சரித்திரம்
ஜோதிடம்
இலக்கியம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink