வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள்,
 • வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள்,

  வடகொரியாவின் ஏவுகணை தொழில்நுட்பமானது அமெரிக்காவின் பாதுகப்பு அம்சங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் திறன் கொண்டவை என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த வாரம் வடகொரியா தமது புதிய தொழில்நுட்பத்தில் உருவான Hwasong-15 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது.

  குறித்த ஏவுகணை தொடர்பில் கசிந்த தகவல்களால் ஏற்கெனவே அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வந்தது. மட்டுமின்றி இதுவரை இல்லாத அளவுக்கு அதன் தாக்குதல் திறன் அதிகரிக்கப்பட்டிருப்பதும்,

  அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் குறிவைக்கும் திறன் கொண்டது எனவும் வடகொரியாவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

  பிரபல ராணுவ நிபுணர்களும் வடகொரியாவின் வாதத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், தற்போதைய சூழலில் வடகொரியாவின் Hwasong-15 ஏவுகணையை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் வடகொரியாவின் ஏவுகணைகளை தகர்க்கும் அமெரிக்காவின் வாய்ப்பானது 50 சதவிகிதமாக சரிந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆனால் தங்கள் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தால் எதிரி நாடுகளின் 92 சதவிகித ஏவுகணைகளை எதிர்கொண்டு அழிக்கும் திறன் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.

  ஆனால் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் தற்போதைய நிலையில் பயனற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

  அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் கலிபோர்னியா பகுதிகளில் மட்டும் 40 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது அமெரிக்கா.

  வடகொரியா ஒரே ஒரு ஏவுகணையை மட்டும் ஒரே நேரத்தில் ஏவினால், அமெரிக்காவால் அதனை தாக்கி அழிக்க முடியும்.

  ஆனால் வடகொரியாவின் புதிய தொழில்நுட்பம் அதற்கு வாய்ப்பளிக்காமல் இலக்கை சென்று தாக்கும் திறன் படைத்தவை எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள், வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள், வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள், வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள், வடகொரியாவின் புதிய ஏவுகணை: அமெரிக்காவை எச்சரிக்கும் நிபுணர்கள்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
விளையாட்டு செய்தி
தங்க நகை
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்