2,124 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் டி.ஜெயக்குமார்,
 • 2,124 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் டி.ஜெயக்குமார்,

  நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, உதயகுமார் உள்ளிட்டோர்.

  ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 2124 மீனவர்கள் அண்டை மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  நாகர்கோவிலில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 44 மீனவக் கிராமங்களிலும் உள்ள மீன்பிடிக்கும் பாரம்பரிய படகுகளில் 5,720 படகுகள் பத்திரமாக உள்ளன. 39 படகுகளை தேடி வந்தோம். அதில் 6 படகுகள் திரும்பி வந்துள்ளன. 1,229 விசைப்படகுகளில் 945 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. 182 படகுகள், 2,124 மீனவர்கள் அண்டை மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்டுவர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 97 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

  கடலுக்கு சென்ற மீனவர்கள் விவரம் சேகரிப்பு: குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களிலிருந்து எத்தனை மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் கிராமங்கள் வாரியாக விவரங்கள் சேகரிக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மீனவர்களுக்காக கிராத்தூரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்கள் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை. மீனவர்களைத் தேட கப்பல்கள் மற்றும் ராஜாளியிலிருந்து விமானம் வரவழைக்கப்படுகிறது. லட்சத்தீவில் 172 மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றார் அவர்.

  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி: மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் நகரத்தில் 50 சதவீத மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற நகராட்சிப் பகுதிகளில் 30 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆடு, கோழி, மரங்கள், படகுகள் உள்ளிட்ட அனைத்துக்கும் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது என்றார்.

  மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
உலக சட்டம்
வீடியோ
இலங்கை செய்தி
 மரண அறித்தல்