சுவிஸில் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள தடை,
 • சுவிஸில் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள தடை,

  சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் பொது இடத்தில் முகத்தை மூடிக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  நேற்று முன்தினம் மாகாண நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

  இதன்மூலம் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள, நிஹாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது, இது போராட்டங்களின் போது முகத்தை மூடிக் கொள்பவர்களுக்கும் பொருந்தும்.

  எனினும் உடல்நலம் மற்றும் காலநிலை தொடர்பில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  ஆண்- பெண் பாகுபாடு காட்டி ஒருவரை வற்புறுத்தி முகத்தை மூடிக்கொள்ள செய்வதற்கு அனுமதியில்லை, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் அளித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்.

  ஏற்கனவே கடந்தாண்டு Ticino மாகாணத்தில் முதன்முறையாக தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலும், நாடு முழுவதும் தடை விதிக்க சுவிஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
சட்டம்
இலங்கை செய்தி
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்