எகிப்து தீவிரவாத தாக்குதலில் 235 பேர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்து கடும் கண்டனம்,
 • எகிப்து தீவிரவாத தாக்குதலில் 235 பேர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்து கடும் கண்டனம்,

  எகிப்து பள்ளிவாசலில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

  எகிப்தின் வட சினாய் மாகாணத்தில் உள்ள பிர் அல்-அபெட் நகரில் அமைந்துள்ள அல்-ரவாடா பள்ளிவாசலில் நேற்று நாற்பது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் உயிரிழந்தனர்.

  தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

  இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சுவிஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. நாட்டின் வெளியுறவு துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், எகிப்தின் வட சினாய் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என கூறப்பட்டுள்ளது.

  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினர் டோரீஸ் லுத்தர்ட் கூறியுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சினிமா
விவசாயத் தகவல்கள்
உலக சட்டம்
 மரண அறித்தல்