19.12.2017.ல் வாக்கிய பஞ்சாங்கப்படி இடம்பெறும் சனிப்பெயர்ச்சியால்.- 2020 வரை உங்களுக்கு எப்படி,
 • 19.12.2017.ல் வாக்கிய பஞ்சாங்கப்படி இடம்பெறும் சனிப்பெயர்ச்சியால்.- 2020 வரை உங்களுக்கு எப்படி,

  தொகுப்பு.மார்கண்டு தேவராஜா(LLB)மயூராகோல்ட்ஸ்மித்  சுவிட்சர்லாந்து..ராசி பலன் .லக்கின பலன். எண்கணித ஜோதிட  பலனையும் தழுவியே தொகுக்கப் பட்டுள்ளது படித்துப் பயன் பெறுங்கள் முடிந்தவரை நண்பர்களுக்கும் பகிருங்கள்,

  திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி மாதமே சனிப்பெயர்ச்சி வருகிறது வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு கடைசியில் டிசம்பரில் தமிழுக்கு மார்கழியில் 19.12.2017 வருகிறது. இந்த முறை மட்டும் இரு பஞ்சாங்கம் இடையே இவ்வளவு வித்தியாசம் வருவதால் எப்போது சனிப்பெயர்ச்சி எதை முறையாக எடுத்துக்கொள்வது என மக்கள் குழப்பத்தில் இருப்பார்கள் .

  திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் சொல்லும் நாளில்தான் சனிபெயர்ச்சி விழா நடத்துவர்.எல்லா சனி சன்னதிகளிலும் 19.12.2017 அன்றுதான் சனிபெயர்ச்சி.திருக்கணிதம் எனும் திருத்தப்பட்ட பஞ்சாங்க அடிப்படையில் சனி அதற்கு முன்பாகவே அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் 26.1.2017முதல் சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிட்டார்.

  திருக்கணிதப்படி முறையான சனி பெயர்ச்சி 25.10.2017 அன்று வந்தது ...என்பதை கவனத்தில் வைக்கவும்.அதுவரை அதிசாரத்தில் மட்டுமே சனி தனுசுக்கு வருகிறார்.அதிசாரம் எனப்படுவது இதற்கு நேர் மாறாக ஒரு கிரகம் முன்னோக்கிப் போவது போன்ற தோற்றத்தை தருவதாகும்.

  வாக்கிய பஞ்சாங்கப்படி இப்போது விருச்சிகத்தில்தான் சனி நிலையாக இருக்கிறார்...19.12.2017 அன்றுதான் சரியாக தனுசு ராசிக்கு செல்கிறார்.இருப்பினும் ஒரு காலை  மட்டும் வீட்டுக்குள் வெச்ச மாதிரி சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிடுவதால் சனிப்பெயர்ச்சியாக எடுத்துக்கொண்டு பலன்கள் பார்க்கலாம்.

  இதுவே அக்டோபர் மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சியானாலும் ,டிசம்பர் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி தனுசுக்கு மாறினாலும் இந்த பலன்கள் பொருந்தும்.இருப்பினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே பலன்களை கணித்து வெளியிடுகிறேன்.

  சனியால் உண்டான பாதிப்புகள் குறைய,சனிக்கிழமை காகத்துக்கு சாதம் வைத்து விரதம் இருத்தல்,ஊனமுற்றோர்க்கு உதவுதல்,முதியோர்க்கு அன்னதானம்,வஸ்திர தானம்,சொர்னதானம் செய்தல் ,

  சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது.மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை,தீமைதான்.அஷ்டம சனி,ஏழரை சனி,கண்டக சனி ,விரய சனி,பாத சனி அதிக பாதிப்பை தரும்.வக்கீலை பார்த்தல்,டாக்டரை பார்த்தல்,கோர்ட் வாசலை மிதித்தல்,போலீஸ் ஸ்டேசன் வாசலை மிதித்தல்,வழக்கு,சிறைவாசம்,வெட்டியானை பார்த்தல்,கொள்ளி வைத்தல்,அறுத்தல்,கிழித்தல்,தையல் போடுதல் எல்லாம் சனியால்தான் நடக்கிறது.குரு மங்கள் காரியம்.சனி அசுப காரியம்.அதனால்தான் சனிப்பெயர்ச்சியை கண்டு மிரட்சியடைகிறோம்.

  ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ ,குருவோ பலனை தர முடியும்.கண்டக சனி நடக்கும்போது ஆறுக்குடையவன் திசை நடந்தால் ஆபரேசன் நடக்கும்.அஷ்டம சனி,ஏழரை சனி  நடக்கும்போது ஜாதகத்தில் எட்டுக்குடையவன் திசை நடந்தால் நஷ்டத்தை சந்தித்தாக வேண்டும்.வழக்கை சந்தித்தாக வேண்டும்.

  அஷ்டம சனி,ஏழரை சனி நடக்கும்போது யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம் ,காதுகுத்து ,வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.

  தனுசு,கன்னி,விருச்சிகம்,ரிசபம்,மகரம்  ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் கைக்குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு சளி,காய்ச்சல்,வயிற்றுப்போக்கும் குழந்தையின் தாய்க்கு உடல் பாதிப்பும்,தந்தைக்கு பண விரயமும் அதிகமாக இருக்கும்.

  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் சனி இருக்கும்போது படிப்பில் கவனம் குறையும். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும் எதையாவது உடைப்பது,நெருப்பில் சுட்டுக்கொள்வது,மின்சாரத்தை தொடுவது,கீழே விழுந்து அடிபடுதல்,காய்ச்சல் மற்றும் சீசன் நோய்கள் உடனே பாதிக்கும்.குழந்தைகளை நொந்து கொள்ளாதீர்கள்.பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

  பருவ வயது குழந்தைகள் என்றால் 21 வயதுக்குள் எனில் புதிய நண்பர்கள் சேர்க்கை,கெட்ட சகவாசத்தால் கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்வர்.வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவர்.அடுத்தவர் செய்த தப்பு இவர்கள் மேல் விழும்.பக்கத்து வீட்டாரோடு சண்டையிடும் நிலை வரும்.புது பாய்பிரண்ட் ,கேர்ள் ப்ரெண்டு கொடுத்து, கெடுத்து வைக்கும்.கவனமாக கண்காணியுங்கள்.

  40 வயதுக்கு மேல் இருக்கும் தனுசு,ரிசபம்,விருச்சிகம்,மகரம் ராசியினர் மற்றும் கன்னி ராசியினர் உடல்நலனில் அதிக கவனம் வைக்கவும்.முழு செக்கப் செய்து கொள்ளுங்கள்..உணவு விசயத்தில் கவனம் தேவை.சுகர்,பிரசர் போன்ற மருத்துவத்துக்கு கட்டுபடாத நோய்கள் உண்டாகும் காலம்.நடுத்தர வயதினர் குடும்பத்தினரிடம் அனுசரித்து போங்கள். வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.குடிப்பழக்கம் இருப்பவர்கள் அதிக கவனமுடன் இருங்கள்..குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

  இந்த வருடம் இடம் பெற்ற சனிமாற்றத்துடன் தொடராக 2020 ம் ஆண்டு வரை சனி பகவான் எந்தெந்த கிரகங்களுக்கு என்னென்னே செய்வார்  என்பதை தெளிவாக ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளோம்,

  சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்த்தார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

  இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

  1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின்

  2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்

  3. 30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

  ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.

  சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை நாம் 4 கட்டங்களாகப் பார்க்க இருக்கிறோம்.

  பொதுப்பலன்கள் :

  1. சனிபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஏற்படும் அனைவருக்குமான பொதுப்பலன்கள்.

  2. சனிபகவான் தனுசுராசியில் உள்ள மூலம், பூராடம், உத்தராடம் மற்றும் விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம்செய்யும்காலங்களில் அதாவது (வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் நடக்கும்) பொதுப்பலன்கள்

  3. அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள் (உதாரணமாக ஒருவர் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றாலும் சிம்மராசியில் உள்ள மகம், பூரம், உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் இதில் அடங்கும்) .

  4. சனிபகவானின் பார்வை 3, 7, 10ம் இடங்கள்ஆகும். இவர் ஒவ்வொருவர் ராசிக்காரர்களுக்கும் அவர்பார்வை படும் இடங்களில் ஏற்படும்பலன்கள்.

  என 4 வகையான பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.

  இத்துடன் இக்காலங்களில் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அவைகளையும் கருத்தில்கொண்டு என்ன பலன்கள் நடைபெறும் என்பதை மிகவிரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  இங்கு அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நடப்பு தசாபுத்தி காலங்களில் நடைபெறும் பலன்களே முக்கியமானது ஆகும். அத்துடன் சனிப்பெயர்ச்சி என்பது கோச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பொதுப் பலன்கள் ஆகும். இவ்விரண்டும் கலந்தே ஒரு மனிதரது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  துலாம்  லக்கினத்தில் பிறந்தோருக்கான பலன்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
  லக்ன பொதுப்பலன்கள்,
  ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறக்குபொழுது ஜாதகம் என்ற ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. அவரவர்கள் ஜாதகம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் ஒரு லக்னம் ஒரு ராசி ஒரு நட்சத்திரத்தில் ஜனனம் நடைபெறுகிறது. லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். உயிரில்லாமல் இந்த உடல் இல்லை உடல் இல்லாமல் உயிர் இல்லை, உடலும் உயிரும் இணைந்ததே ஆன்மாவாகும்.

  இங்கு ஒவ்வொருவருக்கும் எந்த லக்னத்தில் பிறந்தால் என்ன பலன்கள் என்ற விவரங்களை சுருக்கமாக இங்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொதுப்பலன்களேயேன்றி சிறப்புப் பலன்கள் அல்ல மேலும் லக்னபலனும் அடுத்துவரும் ராசிபலனும் கிட்டதட்ட ஒரேவிதமான பலன்களைக் குறிக்கும்.

  உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு ஒரு லக்னம் இருக்கும். அதற்கு இங்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள பலன்களைப் பார்க்கவும். அதே சமயம் “ராசி” என்ற ஒன்று இருக்கும், அதற்கு ராசிக்குரிய பலன்களைப் பார்க்கவும். மேலும் “லக்னம்” எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிக்குரிய பலனையும் பார்க்கவும். அப்படிப் பார்க்கும் பொழுது ஓரளவு பொதுப்பலன்கள் ஒத்துவரும்.

  உதராணமாக ஒருவர் “சிம்ம லக்னம்” மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்ததாக வைத்துக் கொள்வொம், சிம்ம லக்னத்துக்குரிய பலன்களை சிம்ம லக்னம் என்ற தலைப்பில் பார்க்கவும். அத்துடன் “ராசி பலன்கள்” என்ற தலைப்பில் சிம்மராசி என்ற தலைப்பில் உள்ள பலன்களைப் பார்க்கவும். அத்துடன் மீன ராசிக்குரிய பலன்களையும் படித்துப் பார்க்கவும்.

  மற்றுமொரு உதாரணத்துடன் விளக்குகிறோம். ஒருவர் “விருச்சிக லக்னம்” புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அவர் முதலில் விருச்சிக லக்னம் என்ற தலைப்பில் விருச்சிக் ராசி என்ற தலைப்பில் உள்ள விவரத்தை படித்தபின், ராசி பலன்கள் என்ற தலைப்பில் விருச்சிக ராசி என்ற தலைப்பில் உள்ள விஷயங்களையும் அதன்பின் மிதுனராசி என்ற தலைப்பில் உள்ள பலன்களையும் படித்துப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  அதன்பின் நட்சத்திரப் பலன்கள் என்ற தலைப்பில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்துனுடைய பொதுப்பலன்களையும் மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய தேவதைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றைப் பார்த்துப் படித்து அந்தந்த தேவதைகளை வணங்கி அருள்பெறுக.

  தனுசு லக்னப் பலன்கள்

  தேவகுருவான குரு பகவானுடைய லக்னத்தில் பிறந்த இவர்கள் நுண்ணிய அறிவும் ஆற்றலும் உடையவர்கள். நல்ல வலுவான புத்தியுள்ளவர்கள். எப்பொழுதும் நிரந்தரமான சீரான வாழ்வு வாழ்பவர்கள். நல்ல சுறுசுறுப்பும் ஆன்மீக ஈடுபாடும் உள்ளவர்கள். கலைத்துறையில் ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள். அதே சமயம் தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடமாட்டார்கள்.

  இந்த தனுசு லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல கதை, கவிதை, பாட்டு, நடனம், நாட்டியம் இவற்றில் ஆர்வமும் அபாரஞானமும் உள்ளவர்கள். அதே சமயம் சற்று சோம்பேறித்தனமாகவும் இருப்பர். நல்ல குழந்தைச் செல்வங்களை உடையவர். நல்ல உடைகளையும் நகைகளையும் வாங்கி அனுபவிப்பதில் ஆர்வம் உடையவர்கள். நல்ல வாத்தியங்களை வாசிக்கவும் அதைப்பற்றியும் ஓரளவு தெரிந்திருப்பர். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள் நண்பர்களிடம் மிகவும் பிரியமுடன் நடந்து கொள்வார்கள்.

  ராசிகளும் அதில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்களும்.


  நட்சத்திர வடிவம் மற்றும் கூட்டு எண்.


  கணம் :-

  கணம் என்றால் “குணம்” என்று பொருள். மனிதர்களை 1. தேவகணம், 2. மனுஷ கணம், 3. ராஷஸ கணம் என்று முன்னோர்கள் பகுத்து இந்தந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்ன குணம் உடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுக்ள்ளனர். தேவ கணத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த குணமும் நல்ல சிந்தனையும் உடையவர்கள். மனுஷ கணத்தில் பிரந்தவர்கள் சராசரி மனிதனுடைய குனத்தைப் பிரதிபலிப்பவர்கள் என்றும், ராஷஸ கணத்தில் பிறந்தவர்கள் கோப குணமும், சற்று முரட்டு சுபாவம் உடையவர்கள் என்று நம் முன்னோர்கள் பகுத்தாய்வு செய்துள்ளார்கள்.

  மரம்:-

  ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குமான மரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரம் எதற்காக என்றால் “குழந்தைப் பாக்யம்” எப்படி என்பதைப் பற்றி அறிய உதவும். இதில் பால் உள்ள மரம் பால் இல்லா மரம் என இருவகைப்படும். பால் இல்லா மரங்களில் பிறந்தவர்களுக்கு குழந்தை பாக்யத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படும். அதைக் கணக்கிடுவதற்கு இந்த மரங்கள் நமக்குப் பயன்படுகிறது. இந்த மரங்களை நட்டு வணங்கி வந்தால் நமக்கு சகல நலங்களும் கிட்டும் என்று முன்னோர்கள் தீர்மானித்தார்கள்.

  மிருகம்:-

  அதே போல் ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மிருகம் எவை என்பதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்லல் வேண்டும். இந்த மிருகம் எதைக் குறிப்பிடுகிறது என்றால் திருமணம் பொருத்தத்தில் “யோனிப் பொருத்தம்” என்ற விஷயத்திற்கு அவசியம் கணக்கிடப்படுகிறது. இது திருமணப் பொருத்தத்தில் மிக முக்கியமானது. யோனிப் பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்ய இயலாது என்பதேயாகும்.

  பஷி:-

  ஒவ்வொருவரும் எந்தப் பஷியில் பிறந்துள்ளோம் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவையும் திருமணம் பொருத்தத்தில் முக்கியமானது ஆகும்.

  நாடி:-

  நம் உடம்பில் 3 விதமான நாடிகள் உள்ளன. அவை வாதம் பித்தம், சிலேத்துமம் ஆகும். ஒரே நாடியில் பிறந்தவர்களை இணைக்கக் கூடாது என்றும், அதனால் பிரச்சனை வரும். திருமணம் பொருத்தத்தில் உள்ளதால் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த நாடியில் பிறந்தோம் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது ஆகும்.

  ரஜ்ஜூ:-

  ஒவ்வொருவரும் எந்த “ரச்சுவில்” பிறந்துள்ளோம் என்பது மிக முக்கியமானது. ரச்சு என்றால் “மாங்கல்யம்” என்று பொருள். மாங்கல்யம் பெண்கள் அணியக்கூடியது. கணவன் ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றால் நீண்ட ஆயுள் அல்லது பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகம் வேண்டும். இந்த ரச்சு என்பது சிரசு ரச்சு, கண்ட ரச்சு, வயிறு ரச்சு, துடை ரச்சு, பாத ரச்சு என 5 வகைப்படும். இவைகளில் நாம் எந்த ரச்சுவில் பிறந்துள்ளோம் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும். “ரச்சு” திருமணப் பொருத்தத்தில் மிக மிக முக்கியமானது. ரச்சு தட்டினால் திருமணம் செய்யக் கூடாது என்பது விதி.

  9) தனுசு (லக்கின) ராசிக்காரர்கள் :
  சுத்தத்தை உயிரை விட உயர்வாக மதிப்பவர்கள். வீட்டில் யார் எப்படி இருந்தாலும் இவர்கள் வீட்டை சரியாக பராமரித்துக்கொண்டு இருப்பார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மற்றவர் எடுத்த பொருளை சரியான இடத்தில் வைக்காவிட்டாலும் இவர்கள் சரியான இடத்தில் வைப்பவர்கள், எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தனது உறவினர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தனி வீட்டில் வசிக்கவே ஆசைபடுவார்கள்.
  வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
  வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
  காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
இலங்கை செய்தி
சினிமா
இலக்கியம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink