19.12.2017.இடம்பெறும் சனிப்பெயர்ச்சியால்.- லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்,
 • 19.12.2017.இடம்பெறும் சனிப்பெயர்ச்சியால்.- லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்,

  தொகுப்பு.மார்கண்டு தேவராஜா(LLB)மயூராகோல்ட்ஸ்மித்  சுவிட்சர்லாந்து மேஷ ராசியினருக்கான மேலே உள்ள பலன்களுடன்  மேஷ லக்கிலத்தில் பிறந்தோருக்கான பலன்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  மேஷ லக்கிலத்தில் பிறந்தோருக்கான பலன்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இதில் பிறந்தவர்கள் நல்ல குணம் உடையவர்கள், சுய அபிமானம் உடையவர்கள். நல்ல பெயர் புகழ் உடையவர்கள். அதே சமயம் சற்று முன்கோபம் உடையவர்கள். மற்றவர்களால் வசீகரிக்கப்படுபவராக இருப்பார்கள். அதே சமயம் நல்ல சாமர்த்தியசாலிகளாக விளங்குவார்கள். ஓரளவு நல்ல செல்வம் செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்.

  இந்த லக்னத்தில் பிறந்த பெண்களைப் பொறுத்தவரை நல்ல தைரியம் உள்ளவர்களாகவும் வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும் தன்னை நன்கு அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வமும் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர்கள். தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகும் இயல்புடையவர்கள். மற்றவர்களின் குற்றம் குறைகளை வெகு எளிதில் கண்டு கொள்வர்.

  மேச (லக்கின) ராசிக்காரர்கள் :
  பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருப்பவர்கள். இவர்கள் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தான் இருக்கும் வீடு குடிசை ஆனாலும் சரி மாளிகை ஆனாலும் சரி அதை பராமரிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. எந்த இடத்தையும் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் திறமை உள்ளவர்கள். அப்பார்ட்மெண்ட் அல்லது காம்பவுண்ட் தொடர் குடியிருப்புகளில் குடியிருக்க விரும்புவார்கள்.
  வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
  வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
  மதில் சுவருக்கு அல்லது பிரதான நுழை வாயில் கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் வைட்..

  ஜோதிட சாஸ்த்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். பஞ்ச அங்கங்களில் நட்சத்திரமும் ஒன்றாகும். ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசியில் விழுகிறதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசி மொத்தம் 12 ஆகும். மொத்த நட்சத்திரம் 27 ஆகும். இங்கு ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

  சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் முழுமையாக ஒரு ராசியை மட்டுமே குறிக்கும். சில நட்சத்திரங்கள் 2 ராசியைக் குறிக்கும். அதாவது சில நட்சத்திரங்கள் 2 ராசியங்களை ஆள்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளனர். உதாரணமாக ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்ததாகக் வைத்துக் கொண்டால் அவரது ராசி மேஷம் ஆகும். ஏனெனில் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தின் 4 பாதங்களும் முழுமையாக அடங்கியுள்ளன. எனவே அவர் அசுவினி நட்சத்திரம் என்றால் எப்பொழுதுமே அவர் மேஷ ராசிக்காரர் என்றுதான் அர்த்தம்.

  அதே சமயம் ஒருவர் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததாக வைத்துக் கொள்வோம், கார்த்திகை நட்சத்திரத்தின் 1ம் பாதம் மேஷ் ராசியாகும். 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியில் அடங்கியுள்ளன. இங்கு அவர் கார்த்திகை நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் பிறந்தார் என்று முதலில் பார்க்க வேண்டும். இதை அவர் பிறந்த நாடு பிறந்த ஊர் பிறந்த நேரம் இவற்றின் அடிப்படையில் அந்தந்த ஊரின் சூரிய உதயத்தை வைத்தும் அன்றைய பஞ்சாங்கத்தைப் பார்த்து சந்திரனின் நிலையை வைத்து அவர் எந்த பாதத்தில் பிறந்தார் என்று முடிவு செய்ய முடியும். இங்கு அவர் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் என்றால் மேஷ ராசியும் அது இல்லாமல் கார்த்திகை நட்சத்திரத்தில் 2,3,4, பாதங்கள் என்றால் ரிஷப ராசியும் குறிக்கப்படும். எனவே நட்சத்திரப் பாதத்தை வைத்து அவர் எந்த ராசியில் பிறந்தார் என்று அறிய முடியும்.

  ஒருவர் கோயிலுக்குப் போய் அர்ச்சகரிடம் தன்னுடைய கோத்தரம் மற்றும் தன்னுடைய ஜென்ம நட்சத்திரம் இவற்றைக் குறிப்பிட்டு அர்ச்சனை செய்யச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு மிருகசீரிஷம் நட்சத்திரம் என்று சொன்னால் போதாது. அவர் எந்த ராசி என்று குறிப்பிட வேண்டும். காரணம் மிருகசீரிஷ நட்சத்திரத்தின் 1,2 பாதங்கள் ரிஷப ராசியிலும் 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் அடங்கியுள்ளன. இங்கு அவர் மிருகசீரிஷ நட்சத்திரம் 1,2 பாதங்கள் என்றால் ரிஷப ராசியிலும் 3,4 பாதங்கள் என்றால் மிதுன ராசி என்றும் தெள்ளத் தெளிவாக தன் ராசியை தெரிந்து சொல்ல வேண்டும். இல்லையேல் தவறான ராசிக்கு அர்ச்சனை நடக்கும்.

  ஒருவர் உத்தராட நட்சத்திரத்தில் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். உத்தராட நட்சத்திரத்தின் 1ம் பாதம் தனுசு ராசியிலும் 2,3,4 பாதங்கள் மகர ராசியிலும் அடங்கி உள்ளன. எனவே எல்லோரும் தங்களது நட்சத்திரம் எத்தனையாவது பாதம் அது எந்த ராசியைக் குறிக்கிறது என்று அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும். அப்பொழுதுதான் கோயிலில் அர்ச்சனை செய்ய திருமணப் பொருத்தம் பார்க்க யாகம் முதலிய பூஜைக் காரியங்களுக்கு உபயோகப்படும்.

  இங்கு 27 நட்சத்திரங்களும் அவற்றின் பாதங்கள் எந்தெந்த ராசியில் அடங்கியுள்ளன என்ற விபரம் தரப்பட்டுள்ளது. அடுத்ததாக நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அந்த நட்சத்திரம் ஆகாயத்தில் என்ன வடிவத்தில் உள்ளது என்றும் எத்தனை நட்ச்சத்திரத் தொகுப்பு என்று கணக்கிட்டு அவற்றையும் எண்ணாக நமது முன்னோர்கள் தொகுத்து கொடுத்துள்ளார்கள்.

  வானில் எத்தனையோ கோடிக்கணக்கான நட்ச்சத்திரங்கள் இருந்தாலும் நம் முன்னோர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட நட்ச்சத்திரங்களின் கூட்டத்தையே ஒரு நட்சத்திரமாக பாவித்து அவற்றின் உருவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணி அவற்றின் உருவம் எண் இவற்றை நமக்கு சுட்டிக்காட்டி உள்ளார்கள். இந்த கூட்டு எண் சில நூல்களுக்கிடையே சிறுசிறு வித்யாசம் இருப்பினும் இங்கு மூல நூல்களை நன்கு ஆய்ந்து நட்ச்சத்திரங்களின் உருவம் எண் இவற்றைக் கொடுத்துள்ளோம். அடுத்து நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலனும் ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் சிறப்புப் பலனும் கால தேசத்திற்கு தக்கவாறு குறிக்கப்படுகிறது.

  புராணத்தில் இந்த நட்ச்சத்திரங்கள் எல்லாம் பூலோகத்தில் பிறந்து நல்லது செய்து நல்ல புண்ணிய ஆத்மாக்களே நட்ச்சத்திரங்களாக அவர்கள் பிரகாசிக்கிறார்கள் என்றாலே புண்ணிய ஆத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறது அல்லது குறிப்பிடபடுகிறது.
  ராசிகளும் அதில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்களும்.

  நட்சத்திர வடிவம் மற்றும் கூட்டு எண்.

  கீழே ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கணம், மரம், மிருகம், பஷி, நாடி, ரஜ்ஜூ இவை பட்டியலிடப்பட்டுள்ளது. இதையும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும். திருமணப் பொருத்தத்திற்கு இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் இவைகளைத் தெரிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்ய நன்மை அளிக்கும்.

  கணம் :-

  கணம் என்றால் “குணம்” என்று பொருள். மனிதர்களை 1. தேவகணம், 2. மனுஷ கணம், 3. ராஷஸ கணம் என்று முன்னோர்கள் பகுத்து இந்தந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்ன குணம் உடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுக்ள்ளனர். தேவ கணத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த குணமும் நல்ல சிந்தனையும் உடையவர்கள். மனுஷ கணத்தில் பிரந்தவர்கள் சராசரி மனிதனுடைய குனத்தைப் பிரதிபலிப்பவர்கள் என்றும், ராஷஸ கணத்தில் பிறந்தவர்கள் கோப குணமும், சற்று முரட்டு சுபாவம் உடையவர்கள் என்று நம் முன்னோர்கள் பகுத்தாய்வு செய்துள்ளார்கள்.

  மரம்:-

  ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குமான மரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரம் எதற்காக என்றால் “குழந்தைப் பாக்யம்” எப்படி என்பதைப் பற்றி அறிய உதவும். இதில் பால் உள்ள மரம் பால் இல்லா மரம் என இருவகைப்படும். பால் இல்லா மரங்களில் பிறந்தவர்களுக்கு குழந்தை பாக்யத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படும். அதைக் கணக்கிடுவதற்கு இந்த மரங்கள் நமக்குப் பயன்படுகிறது. இந்த மரங்களை நட்டு வணங்கி வந்தால் நமக்கு சகல நலங்களும் கிட்டும் என்று முன்னோர்கள் தீர்மானித்தார்கள்.

  மிருகம்:-

  அதே போல் ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மிருகம் எவை என்பதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்லல் வேண்டும். இந்த மிருகம் எதைக் குறிப்பிடுகிறது என்றால் திருமணம் பொருத்தத்தில் “யோனிப் பொருத்தம்” என்ற விஷயத்திற்கு அவசியம் கணக்கிடப்படுகிறது. இது திருமணப் பொருத்தத்தில் மிக முக்கியமானது. யோனிப் பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்ய இயலாது என்பதேயாகும்.

  பஷி:-

  ஒவ்வொருவரும் எந்தப் பஷியில் பிறந்துள்ளோம் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவையும் திருமணம் பொருத்தத்தில் முக்கியமானது ஆகும்.

  நாடி:-

  நம் உடம்பில் 3 விதமான நாடிகள் உள்ளன. அவை வாதம் பித்தம், சிலேத்துமம் ஆகும். ஒரே நாடியில் பிறந்தவர்களை இணைக்கக் கூடாது என்றும், அதனால் பிரச்சனை வரும். திருமணம் பொருத்தத்தில் உள்ளதால் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த நாடியில் பிறந்தோம் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது ஆகும்.

  ரஜ்ஜூ:-

  ஒவ்வொருவரும் எந்த “ரச்சுவில்” பிறந்துள்ளோம் என்பது மிக முக்கியமானது. ரச்சு என்றால் “மாங்கல்யம்” என்று பொருள். மாங்கல்யம் பெண்கள் அணியக்கூடியது. கணவன் ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றால் நீண்ட ஆயுள் அல்லது பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகம் வேண்டும். இந்த ரச்சு என்பது சிரசு ரச்சு, கண்ட ரச்சு, வயிறு ரச்சு, துடை ரச்சு, பாத ரச்சு என 5 வகைப்படும். இவைகளில் நாம் எந்த ரச்சுவில் பிறந்துள்ளோம் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும். “ரச்சு” திருமணப் பொருத்தத்தில் மிக மிக முக்கியமானது. ரச்சு தட்டினால் திருமணம் செய்யக் கூடாது என்பது விதி.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
விளையாட்டு செய்தி
இலக்கியம்
 மரண அறித்தல்