19.12.2017.ல் வாக்கிய பஞ்சாங்கப்படி இடம்பெறும் சனிப்பெயர்ச்சியால்.- 2020 வரை உங்களுக்கு எப்படி,
 • 19.12.2017.ல் வாக்கிய பஞ்சாங்கப்படி இடம்பெறும் சனிப்பெயர்ச்சியால்.- 2020 வரை உங்களுக்கு எப்படி,

  தொகுப்பு.மார்கண்டு தேவராஜா(LLB)மயூராகோல்ட்ஸ்மித்  சுவிட்சர்லாந்து..ராசி பலன் .லக்கின பலன். எண்கணித ஜோதிட  பலனையும் தழுவியே தொகுக்கப் பட்டுள்ளது படித்துப் பயன் பெறுங்கள் முடிந்தவரை நண்பர்களுக்கும் பகிருங்கள்,

  திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி மாதமே சனிப்பெயர்ச்சி வருகிறது வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு கடைசியில் டிசம்பரில் தமிழுக்கு மார்கழியில் 19.12.2017 வருகிறது. இந்த முறை மட்டும் இரு பஞ்சாங்கம் இடையே இவ்வளவு வித்தியாசம் வருவதால் எப்போது சனிப்பெயர்ச்சி எதை முறையாக எடுத்துக்கொள்வது என மக்கள் குழப்பத்தில் இருப்பார்கள் .

  திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் சொல்லும் நாளில்தான் சனிபெயர்ச்சி விழா நடத்துவர்.எல்லா சனி சன்னதிகளிலும் 19.12.2017 அன்றுதான் சனிபெயர்ச்சி.திருக்கணிதம் எனும் திருத்தப்பட்ட பஞ்சாங்க அடிப்படையில் சனி அதற்கு முன்பாகவே அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் 26.1.2017முதல் சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிட்டார்.

  திருக்கணிதப்படி முறையான சனி பெயர்ச்சி 25.10.2017 அன்று வருகிறது...என்பதை கவனத்தில் வைக்கவும்.அதுவரை அதிசாரத்தில் மட்டுமே சனி தனுசுக்கு வருகிறார்.அதிசாரம் எனப்படுவது இதற்கு நேர் மாறாக ஒரு கிரகம் முன்னோக்கிப் போவது போன்ற தோற்றத்தை தருவதாகும்.

  வாக்கிய பஞ்சாங்கப்படி இப்போது விருச்சிகத்தில்தான் சனி நிலையாக இருக்கிறார்...19.12.2017 அன்றுதான் சரியாக தனுசு ராசிக்கு செல்கிறார்.இருப்பினும் ஒரு காலை  மட்டும் வீட்டுக்குள் வெச்ச மாதிரி சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிடுவதால் சனிப்பெயர்ச்சியாக எடுத்துக்கொண்டு பலன்கள் பார்க்கலாம்.

  இதுவே அக்டோபர் மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சியானாலும் ,டிசம்பர் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி தனுசுக்கு மாறினாலும் இந்த பலன்கள் பொருந்தும்.இருப்பினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே பலன்களை கணித்து வெளியிடுகிறேன்.

  சனியால் உண்டான பாதிப்புகள் குறைய,சனிக்கிழமை காகத்துக்கு சாதம் வைத்து விரதம் இருத்தல்,ஊனமுற்றோர்க்கு உதவுதல்,முதியோர்க்கு அன்னதானம்,வஸ்திர தானம்,சொர்னதானம் செய்தல் ,திருக்கொள்ளிக்காடு, குச்ச்னுர்சனி கோயில் சென்று வழிபட்டு வரலாம்.

  சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது.மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை,தீமைதான்.அஷ்டம சனி,ஏழரை சனி,கண்டக சனி ,விரய சனி,பாத சனி அதிக பாதிப்பை தரும்.வக்கீலை பார்த்தல்,டாக்டரை பார்த்தல்,கோர்ட் வாசலை மிதித்தல்,போலீஸ் ஸ்டேசன் வாசலை மிதித்தல்,வழக்கு,சிறைவாசம்,வெட்டியானை பார்த்தல்,கொள்ளி வைத்தல்,அறுத்தல்,கிழித்தல்,தையல் போடுதல் எல்லாம் சனியால்தான் நடக்கிறது.குரு மங்கள் காரியம்.சனி அசுப காரியம்.அதனால்தான் சனிப்பெயர்ச்சியை கண்டு மிரட்சியடைகிறோம்.

  ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ ,குருவோ பலனை தர முடியும்.கண்டக சனி நடக்கும்போது ஆறுக்குடையவன் திசை நடந்தால் ஆபரேசன் நடக்கும்.அஷ்டம சனி,ஏழரை சனி  நடக்கும்போது ஜாதகத்தில் எட்டுக்குடையவன் திசை நடந்தால் நஷ்டத்தை சந்தித்தாக வேண்டும்.வழக்கை சந்தித்தாக வேண்டும்.

  அஷ்டம சனி,ஏழரை சனி நடக்கும்போது யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம் ,காதுகுத்து ,வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.

  தனுசு,கன்னி,விருச்சிகம்,ரிசபம்,மகரம்  ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் கைக்குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு சளி,காய்ச்சல்,வயிற்றுப்போக்கும் குழந்தையின் தாய்க்கு உடல் பாதிப்பும்,தந்தைக்கு பண விரயமும் அதிகமாக இருக்கும்.

  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் சனி இருக்கும்போது படிப்பில் கவனம் குறையும். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும் எதையாவது உடைப்பது,நெருப்பில் சுட்டுக்கொள்வது,மின்சாரத்தை தொடுவது,கீழே விழுந்து அடிபடுதல்,காய்ச்சல் மற்றும் சீசன் நோய்கள் உடனே பாதிக்கும்.குழந்தைகளை நொந்து கொள்ளாதீர்கள்.பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

  பருவ வயது குழந்தைகள் என்றால் 21 வயதுக்குள் எனில் புதிய நண்பர்கள் சேர்க்கை,கெட்ட சகவாசத்தால் கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்வர்.வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவர்.அடுத்தவர் செய்த தப்பு இவர்கள் மேல் விழும்.பக்கத்து வீட்டாரோடு சண்டையிடும் நிலை வரும்.புது பாய்பிரண்ட் ,கேர்ள் ப்ரெண்டு கொடுத்து, கெடுத்து வைக்கும்.கவனமாக கண்காணியுங்கள்.

  40 வயதுக்கு மேல் இருக்கும் தனுசு,ரிசபம்,விருச்சிகம்,மகரம் ராசியினர் மற்றும் கன்னி ராசியினர் உடல்நலனில் அதிக கவனம் வைக்கவும்.முழு செக்கப் செய்து கொள்ளுங்கள்..உணவு விசயத்தில் கவனம் தேவை.சுகர்,பிரசர் போன்ற மருத்துவத்துக்கு கட்டுபடாத நோய்கள் உண்டாகும் காலம்.நடுத்தர வயதினர் குடும்பத்தினரிடம் அனுசரித்து போங்கள். வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.குடிப்பழக்கம் இருப்பவர்கள் அதிக கவனமுடன் இருங்கள்..குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

  இந்த வருடம் இடம் பெற்ற சனிமாற்றத்துடன் தொடராக 2020 ம் ஆண்டு வரை சனி பகவான் எந்தெந்த கிரகங்களுக்கு என்னென்னே செய்வார்  என்பதை தெளிவாக ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளோம்,

  சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்த்தார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

  இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

  1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின்

  2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்

  3. 30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

  ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.

  சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை நாம் 4 கட்டங்களாகப் பார்க்க இருக்கிறோம்.

  பொதுப்பலன்கள் :

  1. சனிபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஏற்படும் அனைவருக்குமான பொதுப்பலன்கள்.

  2. சனிபகவான் தனுசுராசியில் உள்ள மூலம், பூராடம், உத்தராடம் மற்றும் விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம்செய்யும்காலங்களில் அதாவது (வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் நடக்கும்) பொதுப்பலன்கள்

  3. அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள் (உதாரணமாக ஒருவர் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றாலும் சிம்மராசியில் உள்ள மகம், பூரம், உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் இதில் அடங்கும்) .

  4. சனிபகவானின் பார்வை 3, 7, 10ம் இடங்கள்ஆகும். இவர் ஒவ்வொருவர் ராசிக்காரர்களுக்கும் அவர்பார்வை படும் இடங்களில் ஏற்படும்பலன்கள்.

  என 4 வகையான பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.

  இத்துடன் இக்காலங்களில் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அவைகளையும் கருத்தில்கொண்டு என்ன பலன்கள் நடைபெறும் என்பதை மிகவிரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  இங்கு அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நடப்பு தசாபுத்தி காலங்களில் நடைபெறும் பலன்களே முக்கியமானது ஆகும். அத்துடன் சனிப்பெயர்ச்சி என்பது கோச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பொதுப் பலன்கள் ஆகும். இவ்விரண்டும் கலந்தே ஒரு மனிதரது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  மீனம் ராசி பலன்கள்,
  ராசி மண்டலத்தில் 12வது ராசியாகும் இது. ஆங்கிலத்தில் இதை பீஸஸ் (PISEAS) என்று அழைப்பர். பஞ்சபூத தத்துவங்களில் இது “ஜலராசியாகும்”. இது ஒரு பகலில் வலுவான ராசியாகும். சரம், ஸ்திரம், உபய ராசிகளில் இது கடைசி “உபய” ராசியாகும். மேலும் இது “பெண்” ராசியாகும் அத்துடன் “இரண்டு கால்” ராசியாகும். மேலும் இதை “இரட்டை ராசி” என்றும் ஜோதிடத்தில் அழைப்பர். மேலும் இது ஒரு “குறுகிய” ராசியகும். எந்தக் காரியத்துக்கும் இது பயன் அளிக்கவல்லதால் “பலனளிக்கும் ராசி” என்று குறிப்பிடப்படுகிறது.

  இந்த ராசி இரண்டு மீன் சின்னங்களைக் குறிக்கிறது. அதிலும் குறிப்பாக இரண்டு மீன்களும் தலைகீழாக அதாவது தலையும் வாலுமாக மாறி மாறி அமைந்திருக்கும். குறிப்பாக ஒன்று வடக்கு முகமாகவும், மற்றொன்று தெற்கு முகமாகவும் அமைந்திருக்கும்.அதனால்தான் இந்த ராசி தலை, வால் இரண்டிலும் உதயமாவதாகக் குறிக்கப்படுகிறது. இந்த ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதமும், உத்தரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் ரேவதி நட்சத்தித்தின் 1,2,3,4 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசி மண்டலத்தில் 330 டிகிரி முதல் 360 வரை இந்த ராசி வியாபித்துள்ளது.

  இந்த ராசியில் தேவர்களுக்கெல்லாம் அதிபதியான குருபகவான் ஆட்சியாகவும் அசுரர்களுக்கு குருவான சுக்ரபகவான் உச்சமாகவும் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியான புத பகவான் இந்த ராசியில் நீசமாகவும் மற்ற கிரகங்கள் சமமாகவும், நட்பாகவும் இருந்து ஆட்சி செலுத்துகின்றன.

  உடலமைப்பு (STRUCTURE)

  குருவுடைய ராசியில் பிறந்த இவர்கள் நல்ல பருத்த சரீரத்துடன் சற்று குள்ளமான உருவம் உடையவர்கள். கண்கள் அழகாக இருக்கும். பற்கள் பெரியதாகவும் ஒரே சீராகவும் இருக்கும். கன்னங்கள் சதைப்பற்றுடன் அழகாக இருக்கும். உடல் மிருதுவாகவும், பட்டுப்போன்றும் இருக்கும். வாய் சற்று அழகுடன் கவர்ச்சியாக இருக்கும். நெற்றி விசாலமாகவும் கை, கால்கள் சற்று நீண்டும் இருக்கும்.

  குணநலன்கள் (CHARACTER)

  தேவகுருவான குருபகவான் வீட்டில் இந்த ராசிக்காரர்கள் ஜனனமாவதால் இவர்கள் எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடனும், தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்வார்கள். மேலும் நல்ல கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உடையவர்கள். நல்ல தத்துவவாதிகளாக விளங்குவார்கள். மேலும் பரந்த மனப்பான்மையுடையவர்கள். நல்ல சிந்தனையுடையவர்கள். குறிப்பாக ஆழ்ந்த சிந்தனை நல்ல சிந்தனை நல்ல கற்பனை வளம் நல்ல குரல் வளம் உடையவர்களாக விளங்குவார்கள். நல்லவற்றைப் பேசியும், நல்லனவற்றை எண்ணியும் வாழ்வார்கள். மற்றவர்கள் கஷ்டங்களைத் தங்கள் கஷ்டம் போல் பாவிப்பார்கள். அந்தக் கஷ்டங்களைப் போக்க தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யத் தயங்க மாட்டார்கள்.

  தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்வர். எப்பொழுதும் யாருக்கும் தீயதை நினைக்காமல் நல்லதே செய்யும் மனம் உடையவர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றை கற்க அல்லது படிக்க ஆர்வம் உள்ளவர்கள். எப்பொழுதும் நண்பர்கள் புடைசூழ மகிழ்ச்சிகரமாக வாழ்வர். கூச்ச சுபாவம் உடையவர்களாதலால் மற்றவர்களிடம் பேசுவதற்கு சற்று கூச்சப்படுவார்கள்.

  குருபகவான் வீட்டில் ஜனனமாவதால் எப்பொழுதும் புதுமையாக சிந்திக்கும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் எதையும் அணுக முயற்சிப்பார்கள். அளவுக்கதிகமாக மற்றவர்களை நம்பி இவர்கள் மோசம் அடைவார்கள். இவர்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுள் ஏமாற்றுவார்கள். இவர்களுக்கு யார் நல்லவர் யார் கெட்டவர் என்று பகுத்தாய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் அவர்களால் வஞ்சிக்கப்பட்டபின் அவர்களை காலதாமமாக உணர்வார்கள். அதனால் மிகவும் வருத்தப்படுவார்கள்.

  அளவுக்கதிமாக கனவு காண்பதால் எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு என்பது வாழ்க்கையில் இவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும். மற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனோபாவம் உடையவர்கள். எதையுமே தன்னுள் வைத்துக் கொள்வார்கள். எதையும் வெளியே காட்ட மாட்டார்கள். இவர்களது பல செயல்கள் ரகசியமாகவும், மறைமுகமாகவும் இருக்கும். எதையும் வெளியில் தெரியும்படி நடந்து கொள்ள மாட்டார்கள். புத்திசாலித்தனத்துடன் இருப்பதில் இவர்கள் வல்லவர்கள் வளைந்து கொடுத்து எந்தக் காரியத்தையும் சாதிப்பதில் தலைசிறந்தவர்கள்.

  எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்படக்கூடியவர்கள். தங்கள் விருப்பம் நிறைவேற கடுமையாக உழைப்பார்கள். அதே சமயம் கெளரவம், அந்தஸ்து, பெயர், புகழ், இவைகள் இவர்களைத் தேடி வரும். தலைமை ஏற்கும் குணம் இயல்பாகவே இருக்கும் பெரிய காரியங்களை வெகு எளிதில் செய்து முடிப்பார்கள். எப்பொழுதும் மற்றவர்களை வேவுப்பார்ப்பதும், அவர்களை அவர்களுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கவும் செய்வார்கள். பெரிய இயக்கங்கள், கம்பெனிகள், சங்கங்கள் இவற்றை தலைமையேற்று வழி நடத்தும் ஆற்றல் பெற்ற இவர்கள் தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள்.

  பொருளாதாரம் (ECONOMICS)

  இந்த ராசிக்கு 2வது ராசியாக செவ்வாய் வீடாக மேஷ ராசி வருவதால் இவர்களது பொருளாதார நிலை ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். எப்பொழுதும் உழைப்பு உழைப்பு என்ற தாரக மதந்திரத்தைப் பயன்படுத்தி உழைத்து பொருள் சேமிக்க விரும்புவர். சேர்த்த பணம், பொருள்களை சேமித்து வைக்காமல் செலவழிக்கப் பயன்படுத்துவார்கள். அதே சமயம் கையில் பணம் பொருள் இருந்து கொண்டேயிருக்கும். சொந்தமாக மனை வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலர் தங்களது தாயாருக்காக அதிக அளவு செலவு செய்வர். ஒரு சிலர் தங்களது விருப்பம் நிறைவேறுவதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்கமாட்டார்கள். தங்களது மகிழ்ச்சிக்காக அதிகம் செலவு செய்வார்கள்.

  திருமணம் (MARRIAGE)

  இவர்களது ராசிக்கு 7வது ராசியாக புதன் வீடு வருவதால் வரும் கணவன்.மனைவி இளமையாகவும் அழகாகவும் அமைவார்கள். காரணம் புதன் என்றால் இளமை அல்லது அழகு அன்று பொருள். தங்களுக்கு வரும் துணை நன்கு படித்த அழகான இளமையானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தங்கள் துணையின் மீது தீராத அன்பும் பாசமும் உடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அன்பும் இரக்கமும் உடையவர்களாதலால் தங்கள் காதலை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதில் ஆர்வம் உடையவர்கள். அதே சமயம் கூச்ச சுபாவமுடையவர்களாதலால் கூச்சம் காதலுக்கு முட்டுக்கட்டையாக அமையும். இந்த ராசிக்காரர்களின் முதல் எதிரியே சந்தேகம்தான். இந்த ராசிக்காரர்கள் சந்தேகத்தை விட்டொழித்தால் மட்டுமே இவர்களது மணவாழ்வு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். இல்லையேல் காற்று வெளியேறிய பலூன் போல் வாழ்வு சுருங்கி மகிழ்ச்சி என்பது கானல் நீராகிவிடும். இவர்களது ராசிக்கு 2வது வீடான மேஷராசி செவ்வாய் வீடாக வருவதால் இவர்களுக்கு வரும் மனைவி ஓரளவு வருவாய் உள்ளவர்களாகவும், தைர்யசாலிகளாகவும் துணிவு உள்ளவராகவும் வருவார்கள். அவர்களே சுயமாக சம்பாதிப்பவர்களாகவும், கணவனைச் சார்ந்து இராமல் சுயமாகச் சம்பாதிக்கும் இயல்புடையவராகவும் விளங்குவார்கள். நல்ல குழந்தைச் செல்வங்களை அடைய வாய்ப்பு உள்ள இவர்கள் தங்கள் குழந்தைகளின் மீது தீராத அன்பை வெளிப்படுத்துவார்கள். குழந்தைகள் மேல் நல்ல பற்றும் பாசமும் உள்ளவர்கள். குழந்தைகளும் இவர்களின் மேல் பிரியமுடன் நடந்து கொள்வர்.

  நோய் (DISEASE) கடன் (LOAN)

  இந்த ராசிக்கு 6வது ராசியாக சூரியன் வீடாக வருவதால் இவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும் உடலில் தலை, காலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். வாய்ப்புண், பல்வலி, நரம்புத் தளர்ச்சி, குடலில் புண், குடலில் வீக்கம், குடல் இறக்கம் முதலிய நோய்கள் ஏற்படும். உடலில் ரத்த ஓட்டம் குறைத்தல் உடலில் கட்டி, தேமல், வீக்கம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

  இவர்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. தேவைக்கேற்ப கடன் வாங்குவார்கள். இடம், வீடு, வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புக்கள் ஏற்படும். வைத்யச் செலவுகளுக்காக கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும். பணப்புழக்கம் ஓரளவு நல்ல விதமாக அமையும். எதிர்பாராத உதவிகள் எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக வந்து சேரும். குழந்தைகளின் நலனுக்காக நிறையக் கடன் வாங்கிச் செலவு செய்வார்கள். வீட்டில் அடிக்கடி சுபச்செலவுகள் ஏற்பட்டு சுப விரையம் ஏற்படும். அதன் காரணமாக அடிக்கடி கடன் வாங்க வாய்ப்புகள் ஏற்படும்.

  வேலை (JOB) தொழில் (BUSINESS)

  இந்த ராசிக்கு 10வது ராசியாக குரு வீடு வருவதால் அரசால் உயர்பதவி அந்தஸ்து ஏற்படும். பெயர் போன கம்பெனிகளில் வேலை செய்ய சந்தர்ப்பம் அமையும். அடிக்கடி வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல அல்லது வெளியூர் செல்ல சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். மேலும் 6ஆம் வீடு சூரியன் வீடாக வருவதால் மத்திய மாநில அரசுகளில் வேலை, பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வங்கி, சேவைத்துறைகளில் பணிபுரிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இந்த ராசிக்கு 7வது ராசி புதனாக வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி தகவல் தொடர்பு போக்குவரத்து கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கர் போன்ற தொழில்களில் ஈடுபட வைக்கும்.

  இங்கு வேலை, தொழில் என்பது எல்லாம் பொதுவானதே ஆகும். ஒவ்வொரு ஜாதகத்தையும் நுணுகி ஆராய்ந்து பார்த்தே என்ன படிப்பு, என்ன வேலை, என்ன தொழில் என்பதையெல்லாம் அவர்களது ஜாதகத்தை ஆராய்ந்து பலன் கூற முடியும். ஒரு கிரகம் என்றால் சுமார் 30 வகையான வேலை அல்லது தொழில் இருப்பதினால் அந்தந்த ஜாதகத்தைப் பார்த்தே என்ன மாதிரியான படிப்பு, வேலை, தொழில் இவற்றை முடிவு செய்தல் வேண்டும். மேலும் அதாவது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்தும் நடப்பு தசாபுத்தியை வைத்தும் பலன்கள் அறிதல் வேண்டும்.

  அதிர்ஷடக் கிழமை - ஞாயிறு, செவ்வாய்

  அதிர்ஷட எண் - 1,9

  அதிர்ஷட நிறம் -    வெண்மை, சிவப்பு

  அதிர்ஷடக் கற்கள் - மாணிக்கம், பவளம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
தங்க நகை
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்