80 ஆண்டுகளுக்கும் மேலாக கெடாமல் இருக்கும் பாம்பின் விஷம்,
 • 80 ஆண்டுகளுக்கும் மேலாக கெடாமல் இருக்கும் பாம்பின் விஷம்,

  80 ஆண்டுகளுக்கு பிறகும் பாம்பின் விஷம் கெடாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் ‘பையட்டா’ மற்றும் ரத்த அழுத்தத்துக்கு கொடுக்கப்படும் ‘கேப்டோபிரில்’ ஆகிய மருந்துகளில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது.

  இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், 52 விஷ மாதிரிகளை ஆய்வு செய்தனர்.

  அப்போது 80 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷத்திலும், உயிரியியல் ரீதியான செயல்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதுகுறித்து ஆய்வுக்குழுவைச் சேர்ந்த இணை பேராசிரியர் பிரியன் பிரை கூறுகையில், முறையாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷத்தை அறிவியல் ரீதியாக பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், விஷம் மற்றும் நச்சு ஆகியவை மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் ஒவ்வொரு பாம்பு இனத்தின் விஷமும் வெவ்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டவை. எனவே ஒவ்வொரு விஷ மாதிரியும் மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
இலக்கியம்
அரசியல் கட்டுரைகள்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்