அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்,
 • அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்,

  தீபாவளி என்றால் என்ன,தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

  சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.

  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.

  தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

  நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.

  தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.

  அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.

  கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.

  நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

  தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

  1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான். ஒரு காலத்தில் மக்கள் அரக்கராக மாறி விட்டனர். இறைனபிக்கையை மறந்து வாழ்கையில் கிழான நிலையை அடைந்து பாதாளத்தை அடைந்து விட்டனர். இதனால் அசுரன் அவர்களின் மனதை பாயாக சுருட்டி தீய சக்தியில் கடலுக்கடியில் மிக பாதாளத்தில் வைத்து ஒழிந்து கொண்டான்

  2.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம்

  (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும்

  வந்து விரித்தார். இதனால் இறை நண்பிக்கை கொண்டவர்கள் (தேவர்கள்) இறைவனிடம் முறையிட்டனர்.அந்த இறைவன் ( வைணவர்கள் மகாவிஷ்ணு என்கின்றனர்.) அக்காலத்தில் ஒரு புதிய புனித தன்மையுடைய அருள் கொண்டு ( பன்றி அவதாரம் ) உலகத்தை மீட்டு மீண்டும் உலகத்தில் இறை புனித தன்மையை பரப்பினார். அதனால் உலகம் மீண்டும் பக்தியால் விரிக்கப்பட்டது

   3.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.///புனிததால் மக்கள் புத்தி தெளிவு பெற்றனர். அவர்கள் அந்த இறை தன்மையுடன் நண்பிக்கை கொண்டு இரண்டற பக்தியால் கலந்து மேன்மை அடைய ஆசைப்பட்டனர்

  4.ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.///இதனால் அந்த இறைவனும் தன மகிமையால் மக்களுக்கு (பூமி) துணை நின்று, இணங்கி தன் பக்தர்களுக்கு , தன்னிடம் சரண் அடைந்த மகளுக்கு அருள் செய்து பக்தியை வெளிப்படுத்தினார்

  5.அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப்பெற்றது.///அதன் பயனாய் பூமியில் மக்கள் காப்பாற்றப்பட்டு ( மீண்டும் புதிய பிறப்பு எடுத்தல்) அதன் மூலம் நரகாசூரன் தோன்றினான்.இறை தன்மையால் உண்டானவன். இறைவனின் புனிததால் பிறந்தவன்

  6.அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.///ஆனால் அவன் தன்னுடைய புனிதத்தை மறந்து இறுமாப்பு கொண்டு தன்னுடைய வரவுக்கு காரணமாக இருந்த தேவர்களை வருத்தினான்.

   7.தேவர்களுக்காக விஷ்ணு,நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

   அதனால் இறைவன் ( விஷ்ணு ) தன்னுடைய இறை பக்தர்களை காப்பதற்காக தன்னால் பிறந்த நரகாசூரனுடன் போர் துவங்கினார்

  8.விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். ///இறைவன் மிகப்பெரியவன் ( மகாவிஷ்ணு) . அவன்  தாய் தந்தை என்ற இரு சக்திகளை உள்ளடக்கியவன். தான் பெற்ற குழந்தையை தாய் ஸ்தானத்தில் இருந்து அவனை கொன்றார்


  .இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

  இதனால் இறை பெரியோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  10.இந்த மகிழ்ச்சிய ை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின்

  இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.இதுதானே தீபாவளிப்

  பண்டிகையின் தத்துவம்! இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத்

  தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத்

  தெரியும்?யாராவது சொன்னார்களா?

  இதை ஆராய்வோம்
  இந்த நரகாசூரன் மகா விஷ்ணு பிள்ளையாகவே சொல்லப்படுகின்றது.அது ஏன் திராவிடர்களை குறிப்பதாக சொல்லி சாயம் பூசுகின்றனர்.அனைவருக்கும் இன்ப தீபாவளி வாழ்த்துக்கள்.


  தீபாவளி ---தத்துவ விளக்கம் !

  நாராயணன்---நரன் என்றால் மனித சரீரம் !இந்த மனித சரீரத்திற்க்கு கடவுளின் ஆவியில் ஒரு துளி ஊதப்பட்டு உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் வரையில் நரன் எங்கிர சரீரம் இயங்கி வாழ்ந்துகொண்டிருக்கும்!

  பரமாத்துமாவான கடவுளின் ஒரு துளி தான் கடவுளின் அங்கம் என்பதை மறந்து சரீர உணர்வுகளுக்கு ஆட்பட்டு தன்னை மனிதனாகவே கற்பனை செய்துகொள்ளுகிறது!

  அதுதான் நரனாய் ஆனவன் நாராயணன் என்பது!

  சரீரத்தோடு சம்மந்தமடைந்து எல்லா உயிர்களும் தான் பரமாத்மனின் ஒரு நீட்சி என்பதை மறந்து ஜீவாத்துமாவாக மாறுபாடடைகிறது!

  பண்றி என்பது உணர்வுகளை முகர்ந்து அதனையே உண்டு வாழ்வது என்று பொருள்!காட்டுபண்றி தரையை முகர்ந்து உள்ளிருக்கும் கிழங்கு வகைகளை கண்டறிந்து பூமியை தோண்டி கிழங்கை உண்ணுகிறது எந்த பண்றியும் முகற்சி உள்ளது!

  முகற்சி எண்பது மோஹவகைப்பட்டதாகும்!இந்த மோஹத்தை உலகமும் உலகத்தை மோஹமும் காதலித்து நாராயணனை நரகாசுரனாக மாற்றிக்கொண்டு உள்ளன!

  நாரயணனான மனிதன் உலக மாயையில் மூழ்கி `எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி` மோஹ வகைப்பட்டவனாய் உலக பந்தத்தில் மாட்டிகொள்ளுகிறான்!

  உலக பந்தத்தில் மாட்டிகொண்ட நரனை `1)ஆணவம்2)கண்மம்3)மோஹம்4)மதம்5)மாச்சரியம் என்கிற அய்ந்து மாயைகளை பறப்பி வானமண்டலத்து அசுரர்கள் அரக்கனாய் மாற்றுகின்றனர்!

  உலகில் கொடுங்கோலர்கள் துன்மார்க்கர்கள் அசுரர்களின் சிறப்பு அபிசேகம் இல்லாமல் கொடுமை செய்வதில்லை!கடவுள் தனது தூதர்களை அனுப்புவது போல் அசுரர்களும் தனது தூதர்களை பூமியில் அவ்வப்போது அனுப்புகிறான்!கடவுள் பணமும் பதவியும் கொடுத்தால் அந்த மனிதனுக்கு ஆணவத்தையும் அக்கிரமத்தையும் அசுரர்கள் உபதேசித்து அரக்கர்களாய் மாற்றுகின்றனர்!

  நரன் +அசுரன் =நரகாசுரன்

  நரன் தான் நாராயணன் என்பதையும் மறந்து உலகை மோஹித்து பணமும் பதவியும் அடைந்தவுடன் அசுரர்களுடன் கலந்து நரகாசுரனாக மாற்றம் அடைகிறான்!அதனால் தான் நரகாசுரனை நாராயணனாலும் கொல்ல முடியவில்லை என்பது!

  நாராயணனின் மனைவி உயிர்த்தடமாகிய தொப்புளில் தாமரையில் வாசமாயிறுகிரவள்!தாமரை என்பது தான் இருக்கும் தண்ணீருடன் சம்மந்தம் கலவாதது .இவ்வுலகத்திலேயே இருந்தாலும் சரீரத்திலேயே இருந்தாலும் அதில் பட்டும் படாமல் தான் உயிரானது ஓடிக்கொண்டு உள்ளது ஏனென்றால் உயிரானது கடவுளின் ஆவியின் ஒரு துளி ஆகும்!

  எனவே அவளிடம்--உயிரிடம் மனிதன் ஒன்றி தியாணிது தான் சரீரமல்ல ;அது நிலையற்றது!தன் தேர் மட்டுமே!அதில் பயணிக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா; க்ரிஷ்ணனாகிய இறைதூதனுக்கு அடையாளமாகிய தனது உயிரின் பின்னால் செல்லக்கூடியவனாக மாற வேண்டும்!

  ஒரு மனிதனின் சரீரம் என்பது அசுரர்களின் ஆளுகைக்குட்பட்ட பொருளாக--உணர்வு வயப்பட்ட பிரகிருதியாக உள்ளது!அந்த சரீரத்தின் பின்னால் செல்லுகிற மனிதன் அசுரர்களால் ஆளப்பட்டு நரகாசுரனாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன!

  அப்படியில்லாமல் உயிறோடு ஒன்றி தியாணிக்கிற மனிதன்;மேலும் இறைதூதர்களின் உபதேசங்களில் அடிக்கடி ஸ்ணானம் செய்கிற மனிதன் தேரினை அடக்கி க்ரிஷ்ணனின் நண்பனாய் வெற்றி பெறுகிறவனாய் மாறுகிறான்!

  உயிருடன் ஒன்றி தியாணிக்கிற தன்மை பெறுக பெறுக இறைஉணர்வு மனிதனுக்கு விருத்தியாகிறது!இப்படிப்பட்ட மனிதன் தனது பணம்,பதவியை அசுரனின் பேச்சை கேட்டு துஸ்பிரயோகம் செய்வதில்லை!நரகாசுரனாக மாறி விட்ட மனிதனை இத்தகைய மனிதர்களே அடக்குகிண்றனர்!மனித நேயம்,முற்போக்கான காரியங்கள் இறைஅச்சம் உள்ள மனிதர்களாலேயே தலைத்தோங்குகின்றது!

  இருப்பினும் இந்த தத்துவத்தை நிணைவு கூர்வதற்க்கு நரகாசுரனை கொன்ற நாளாக `தீபாவளி` உருவகப்படுத்தப்படுகிண்றது!இது ஒரு உருவகமே!உண்மை நிகழ்சி என எடுத்துக்கொள்ள வேண்டுவதில்லை!

  கங்கா ஸ்ணானம் என்பது நம்மை தூய்மை செய்ய இறைதூதர்களின் உபடதேசங்களில் மூழ்கவேண்டும் என்பதுதான்!

  கடவுள் நம் ஆத்துமாவில் ஒளி ஏற்றுவாராக!


  தமிழா உரியவர்களுக்கு கொண்டு செல்லுங்கள்,
  உடைக்கப்படவிருக்கும் இந்து ஆலயமும் பாராமுகமாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும். மட்டக்களப்பு தமிழகத்தில் ஏறாவூர் நான்காம் குறிச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள நூறு வருடங்களுக்கு மேல் வரலாற்றை கொண்ட வரசித்திவிநாயகர் ஆலயமும் பத்திரகாளியம்பாள் ஆலயத்துக்கு செல்லும் வாசற்கோபுரமும் வீதி அபிவிருத்தி காரணமாக உடைக்கப்படவுள்ளதாக தகவல்.

  இங்கே ஒரு அரசமரம் இருந்தால் உடைப்பார்களா? வீதி அபிவிருத்தி எனும் நோக்கத்தோடு ஏறாவூரில் தமிழர்களது இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கமாக இது இருக்கும் என நினைக்கின்றோம். தமிழ் அரசியல் வாதிகளே ஏறாவூர் மண்ணைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரே இதை கவணத்தில் எடுத்து விரைவாக தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கவும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
உலக செய்தி
இலங்கை சட்டம்
சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort