வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டின் முதல் இந்து தலைமை நீதிபதிக்கு கட்டாய விடுமுறை,
 • வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டின் முதல் இந்து தலைமை நீதிபதிக்கு கட்டாய விடுமுறை,

  வங்காளதேசம் நாட்டின் வரலாற்றில் சுப்ரீம் கோர்ட்டின் முதல் இந்து தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சுரேந்திர குமார் சின்ஹாவுக்கு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

  வங்காளதேசம்: சுப்ரீம் கோர்ட்டின் முதல் இந்து தலைமை நீதிபதிக்கு கட்டாய விடுமுறை

  இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வங்காளதேசம் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சுரேந்திர குமார் சின்ஹா சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 16-வது திருத்தத்தை ரத்து செய்து கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தார்.

  இந்த விவகாரம் அங்குள்ள ஆளுங்கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே நிலை நீடித்தால் பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி நீக்கம் செய்யப்பட்டதுபோல் இங்கும் எதிர்காலத்தில் ஒரு சூழல் ஏற்படலாம் என சில வழக்கறிஞர்களும், ஊடகங்களும் தூபம் போட்டன.

  இதையடுத்து, வங்காளதேசத்தின் பாராளுமன்றத்தையும், ஜனாதிபதியையும் இந்த தீர்ப்பின் மூலம் சுரேந்திர குமார் சின்ஹா அவமதித்து விட்டதாக பிரதமர் ஷேக் ஹசீனா நேரிடையாக குற்றம்சாட்டினார். பிரதமரும் மற்ற மந்திரிகளும் தனது தீர்ப்பை பற்றி தரக்குறைவாக விமர்சித்து வருவது வருத்தம் அளிப்பதாக சின்ஹா வேதனை தெரிவித்திருந்தார்.

  சுரேந்திர குமார் சின்ஹாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவடையவுள்ள நிலையில், உடல்நலக்குறவு காரணமாக கடந்த மூன்றாம் தேதியில் இருந்து அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டதாக வங்காளதேச அரசு அறிவித்தது. அவரது விடுமுறை கடிதத்தை ஜனாதிபதி அப்துல் ஹமித் பரிசீலித்து வருவதாக நீதித்துறை மந்திரி அனிசுல் ஹக் குறிப்பிட்டிருந்தார்.

  இதனால், மன வேதனை அடைந்த சின்ஹா நேற்றிரவு ஆஸ்திரேலியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘எனக்கு உடல்நலம் சரியில்லை என்பது தவறான தகவல். நீதியின் காவலன் என்ற முறையில் நீதித்துறையின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக நான் தற்காலிகமாக செல்கிறேன்.

  எனது தீர்ப்பை அரசு தவறாக புரிந்து கொண்டுள்ளது. இதை பிரதமர் ஷேக் ஹசினா விரைவில் உணர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கிறேன்.

  எனது இடத்தில் அமரும் சுப்ரீம் கோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியை வைத்து தங்களுக்கு வேண்டியதை சாதித்துகொள்ள இந்த அரசு முயற்சிக்கிறது. அப்படி ஏதாவது தலையீடு நடந்தால் நாட்டில் தலைமை நீதி அமைப்பில் அரசி தலையீடு உள்ளதாக கருதப்படும். இது நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான உறவை மேலும் சிதைத்துவிடும். இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை’ என கூறியுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஜோதிடம்
அரசியல் கட்டுரைகள்
சரித்திரம்
உலக சட்டம்
 மரண அறித்தல்