சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளோம்: தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீண்ட கனடிய நபர்,
 • சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளோம்: தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீண்ட கனடிய நபர்,

  எனது குழந்தைகள் கனடாவில் சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளனர் என்று தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கனடிய நபர் கூறியுள்ளார்.

  கனடாவை சேர்ந்த Joshua Boyle என்பவர் அமெரிக்க குடிமகளை திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.

  கர்ப்பிணியான மனைவியுடன் சுற்றுலா சென்றபோது தலிபான் தீவிரவாதிகள் இருவரையும் சிறைப்பிடித்துள்ளனர்.

  அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரவாதிகள் இருவரையும் விடுதலை செய்ய மறுத்து வந்துள்ளனர்.

  பிணையக்கைதியாக இருந்தபோது தாயாருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன.

  இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு கனடாவிற்கு சென்றுள்ளனர்.

  இதுகுறித்து Joshua Boyle கூறியதாவது, எனது குழந்தைகள் இதுவரை ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழவில்லை. 5 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் உண்மையான வீட்டிற்கு வந்துள்ளோம்.

  5 வருடங்கள் பிணையக்கதைகளாக இருந்ததால் தற்போது எதனையும் எங்களால் முழுமையாக உணர முடியவில்லை. என்னுடைய நாட்டிற்கு வந்ததன் மூலம் சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளோம் என கூறியுள்ளார்,

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இலக்கியம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்